Thaazhampoo serial: இச்சாதாரி பாம்பு... மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கேவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலம் திருடியதை எடுத்து போகக் காத்திருக்கும் இச்சாதாரிகள். அபூர்வ சக்தியைக் காவல் காக்கும் குடும்பம்.. வேட்டையாடத் துடிக்கும் கருடன்

நாக இனத்தைக் காக்கப் போராடும் தலைவன் காதலுக்காக தவமிருக்கும் இதயம் என்று ப்ரோமோவில் சொல்லி தாழம்பூ. எனும் புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி.

மீண்டும் இச்சாதாரி பாம்பு, அவர்களுக்கு என்று ஒரு உலகம்... மனித உடலில் பாம்பு வடிவம் என்று ஆரம்பித்து வைக்க இருக்கிறது விஜய் டிவி.

நீயா? ஸ்ரீபிரியா

நீயா? ஸ்ரீபிரியா

முப்பது வருடங்களுக்கு முன்பே நடிகை ஸ்ரீப்ரியா ஒரு சின்ன முடிச்சை வைத்து பாம்பு கதையை நீயா? என்று மிக அழகாக ரசிக்கும்படி படம் எடுத்து இருந்தார். நூறு நாட்கள் வெற்றி கண்ட படம் நீயா? ஆனால், அதை பின்பற்றி அதிக படங்கள் என்று அப்போது புற்றீசல்களாக பாம்பு படங்களாக யாரும் எடுத்து தள்ளவில்லை. மக்கள் யதார்த்தத்தை புரிந்துக் கொண்டவர்களாக இருந்தனர்.

பகை குணம்

பகை குணம்

நல்ல பாம்பை அடித்து பாதியில் விட்டுவிடக் கூடாது என்றும், அப்படி விட்டு விட்டால் அந்த பாம்பு திரும்ப வந்து பழி வாங்கும் என்பதும் ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மையமாக வைத்து நீயா படத்தை எடுத்து வெற்றி கண்டு இருந்தார் ஸ்ரீபிரியா. இப்போது இச்சாதாரி பாம்பு, கருடன் அதை துரத்துவது...கருடன் அந்த பாம்பு இனத்துக்கு பகை என்று மக்கள் அறியாத ஏதேதோ சொல்கிறார்கள்.

மீது உடல்

மீது உடல்

பாதி உடலைப் பாம்பாகவும் ,மீதி உடல் மனித உருவமாகவும் வந்து ஆண்,பெண் இச்சாதாரி பாம்புகளாக காதலிப்பதை காண்பிக்கிறார்கள். நாகமணி, நாகர் குல தலைவன் என்று கதைக் கட்டிக்கொண்டே போவதை பார்க்கையில், நாமும் மெல்ல மெல்ல கிராபிக்ஸ் ,அனிமேஷன் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்பதையும் காண்பிக்கிறது.

கலை இனி

கலை இனி

இப்படியே போனால் கலை உலகம் களை இழந்து, நல்ல படைப்புக்களை மறந்து, கலை இனி மெல்லச் சாகும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளும் இப்படிப்பட்ட சீரியலுக்கு அடிமையாகி.வருங்கால படைப்பாளிகளின் கனவும், கற்பனையும் இதை சுற்றியே வட்டமிடுமோ என்கிற கவலையும் உண்டாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+