அவசர பிரிவில் தாடி பாலாஜி? குடலில் என்ன பிரச்சனை? அட, சைலண்ட்டா இவ்ளோ பேருக்கு உதவி செய்திருக்கிறாரா
சென்னை: பிரபல நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனை ஒன்றில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், தவெக தலைவர் விஜய் நடத்தியிருந்த மாநாடு வரையும் நன்றாகவே இருந்த நிலையில், திடீரென தாடி பாலாஜிக்கு என்ன ஆச்சு? என்றும் யூடியூப் சேனல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பதிலளித்திருக்கிறார். அதில் தாடி பாலாஜி பிறருக்கு உதவும் குணம் குறித்தும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "தாடி பாலாஜி ஒரு மாதமாகவே சிகிச்சையில் இருப்பதாக தெரிகிறது.. தற்போது மீடியாக்களில் செய்தி வரவும், அவரது போன் நம்பரை வாங்கி, நானே அவருக்கு போன் செய்து உடல்நலம் குறித்து விசாரித்தேன்..

குடலில் பிரச்சனை
"வயிற்று வலி உள்ளது.. குடல்ல சில பிரச்சனை உள்ளது.. ட்ரீட்மெண்ட்டில் இருப்பதும் உண்மைதான்" என்றார்.. ஏதாவது பிராப்ளமா சார்? என்று கேட்டதற்கு, "அதெல்லாம் ஒன்னுமில்லை, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்திருக்கிறார்கள்.. இன்னும் ரிப்போர்ட் வரவில்லை.. ஆனால், ட்ரீட்மென்ட் முடிந்து வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொன்னார்..
உடனே நான், குடலில் பிரச்சனை என்றால், மதுப்பழக்கம் உங்களுக்கு உள்ளதா? என்று கேட்டேன்.. அதற்கு தாடி பாலாஜி, இப்போது 2 வருடங்களாக அந்த பழக்கமே தன்னிடம் இல்லை.. தற்போது வந்துள்ள குடல் பிரச்சனைக்கும், அதற்கும் சம்பந்தமில்லை" என்றார்..
பிறகு நான், அந்த குறிப்பிட்ட சேனலில் உள்ளவர்களுக்கு மட்டும் டைவர்ஸ் ஆகிறது, அல்லது ஹாஸ்பிடலில் வரை சென்றுவிடுவதாக ஒரு நெகட்டிவ் பேச்சு உள்ளதே என்று கேட்டேன்.
சத்தமில்லாமல் தாடி பாலாஜி உதவி
அதற்கு தாடி பாலாஜி, "அப்படியெல்லாம் கிடையாது.. ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்ப பிரச்சனை வரத்தான் செய்யும்.. எல்லாருக்கும் உடல்நிலை பாதிப்பு என்பது வரும்தானே? அப்படித்தான் நானும் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளேன்" என்றார்..
பிறகு கேபிஒய் பாலா பற்றி தாடி பாலாஜியிடம் கேட்டதற்கு, "நாம் ஒருவருக்கு உதவி செய்தால், அதை விளம்பரம் செய்து கொள்ள கூடாது.. விளம்பரத்தில் அதிக நாட்டம் காட்டக்கூடாது. இப்போது நீங்கள் கேட்டதால் சொல்கிறேன், நானும்தான் உதவி செய்கிறேன்.. ஆனால், நான் என்ன உதவி செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.. அதை விளம்பரப்படுத்தி கொள்வதில் விருப்பமில்லை.
பாலாவுக்கு சிக்கலே விளம்பரப்படுத்தி கொள்வதுதான்.. ஆனால் பாலா, தனக்காக எந்த காசையும் கையில் வைத்து கொள்ள மாட்டான்.. தன்னுடைய சொந்த செலவுக்கும் வைத்து கொள்ளாமல், எல்லாவற்றையும் பிறருக்கு செலவு செய்யக்கூடியவன்..
சொல்ல சொல்ல பாலா கேட்கல
இதுகுறித்து ஏற்கனவே நான் பாலாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.. "உன் கையில் கொஞ்சமாவது பணத்தை வெச்சுக்கடா"ன்னு சொன்னேன்.. ஆனால் அதை கூட பாலா கேட்கல.. உதவிகளை செய்துட்டு, அதை போட்டோஷூட் எடுத்ததுதான் இப்போது பிரச்சனையாகிவிட்டது.. " என்றார்.. உடனே நான், நல்லபடியாக சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வாங்க சார் என்று சொன்னேன்.
ஆனால், விஜய்யின் தீவிர விசுவாசி தாடி பாலாஜி.. விஜய்க்கு உருக்கமான கடிதத்தை தாடி பாலாஜி எழுதியதாக தவெக தரப்பில் சொல்கிறார்கள்.. எனினும், அந்த கடிதம் விஜய் கைக்கு சேர்ந்ததா தெரியவில்லை.
தாடி பாலாஜி பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்.. சென்னையில் பெரம்பூரில் பெரியார் நகரில் இருந்தார்.. அப்போது அவரை பார்த்திருக்கிறேன்.. அவரது அப்பா அரசு அதிகாரி.. ஹெல்த் இன்ஸ்பெக்டர்.
சீரியஸ் கண்டிஷனா
அதேபோல தாடி பாலாஜி பல உதவிகளை செய்பவர் என்று ஏற்கனவே தெரியும்.. நிறைய பள்ளிகளுக்கு விருந்தினராக சென்று, அங்கு மாணவர்களுக்கு உதவிகளை செய்தது எனக்கு தெரியும். கூகுளிலும் அவர் செய்த உதவிகள் தொடர்பான போட்டோக்களை பார்த்திருக்கிறேன்.. மதுரை முத்துவும் பல உதவிகளை செய்து வருகிறார். இப்படி உதவி செய்பவர்கள் யாரும் கையோடு கேமரா எடுத்து கொண்டு போகவில்லை.
தற்போது தாடி பாலாஜி சிகிச்சையில் உள்ளார்.. ஆனால் சீரியஸ் கண்டிஷனில் இல்லை.. நன்றாகவே பேசினார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications