பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்கு சென்ற தாடி பாலாஜி.. பெண் போட்டியாளருக்கு அளித்த சூப்பர் கிப்ட்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளருக்கு ஒரு அழகான பரிசை தாடி பாலாஜி கொடுத்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சதீஷ், ரம்யா ஆகியோர் உள்ளே வந்தனர். அதன்பிறகு சாண்டி, தீனா ஆகியோர் உள்ளே சென்றுவிட்டு சில நாட்களில் வெளியே வந்தனர்.

6 போட்டியாளர்கள்
தற்போது ஜூலி, நிரூப், பாலா, தாமரை, அபிராமி, ரம்யா பாண்டியன் ஆகிய 6 பேர் வீட்டில் இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது கடைசி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதில் நேற்று ஷாரிக் மற்றும் அனிதா வந்திருந்தனர். இன்றைய தினம் பாலாஜி மற்றும் அபினய் வந்திருந்தனர்.

குஷியான போட்டியாளர்கள்
இருவரையும் பார்த்து குஷியான போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றனர். வரும் போதே கையில் கிப்டுடன் வந்த பாலாஜி, தாமரையிடம் "நான் சொன்னது போல் புடவை வாங்கி கொண்டு வந்துள்ளேன். வாங்கிக் கோ" என்றார், தாமரையும் நன்றி கூறி வாங்கிக் கொண்டார்.

தாடி பாலாஜி
தாடி பாலாஜியை சுற்றி வெளியே அத்தனை பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் இன்றைய தினம் தாமரைக்கு புடவையை வாங்கிக் கொண்டு வந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மகள் வேண்டும்
தாயுடன் இருக்கும் மகளை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறு தாடி பாலாஜி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் நித்யாவோ, மீடியா முன்பு பாலாஜி என்னவேணாலும் பேசுவார், நான் அவரை கோர்ட்டில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications