கமல் வச்ச டிரிங்க்ஸ் பார்ட்டிக்கு போனேன்.. அங்கு என்ன நடந்துச்சுன்னா?.. தாடி பாலாஜி மனைவி நித்யா
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது. கமல்ஹாசன் வைத்த மதுவிருந்தில் நான் சென்றிருந்தேன். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் தற்போது தாடி பாலாஜி- நித்யாவின் குடும்ப விவகாரம் வைரலாகி கொண்டே வருகிறது என சொல்லலாம். காமெடி நடிகராக இருந்த தாடி பாலாஜி, நித்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். நண்பர்கள், நல விரும்பிகள் இவர்கள் ஒன்று சேர நினைத்தும் அது முடியவில்லை, நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையே உள்ள விரிசல் அதிகரித்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இறுதியில் இவர்கள் சேர்ந்துவிட்டதாக காட்டப்பட்டது. ஆனால் இருவரும் இந்த நிமிடம் வரை பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள். மேலும் நித்யா தனது மகளை சமூகவலைதளங்களில் டான்ஸ் ஆட விடுகிறார்.

கமென்ட்
அதற்கு நெட்டிசன்கள் போடும் கமென்ட்டை ஒரு தகப்பனாக என்னால் படிக்க முடியவில்லை. நித்யா அவர் மனம் போன போக்கில் வாழட்டும், அவருக்கு பிடித்தமாதிரியான வாழ்க்கையை வாழலாம். ஆனால் எனது மகளை அவரிடம் இருந்து மீட்டு என்னிடம் தந்துவிடுங்கள் என மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

மோசமான கேரக்டர்
இந்த நிலையில் கமல் ஒரு மோசமான கேரக்டர் என்றும் அவரை போல் ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை நான் என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டார். மேலும் கமல் குறித்தெல்லாம் பேசுவதற்கு என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது. என்னை பேச வைக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

பேட்டி
இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு மது விருந்தை கமல் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது நான் பாலாஜியிடம் விருந்திற்கு நீங்கள் வருகிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார். இதனால் நான் மட்டும் அங்கு போயிருந்தேன். அப்போது திடீரென பாலாஜி என்னிடம் சொல்லாமலேயே அங்கு வந்திருந்தார். கமல் முன்பு பாலாஜி நல்லவர் போல் நடித்தார்.

கமலிடம் பேச முயற்சி
அப்போது முதலே எனது பிரச்சினை குறித்து கமலிடம் பேச முயன்றேன். மக்கள் நீதி மய்யத்திற்காகநான் மிகவும் உழைத்தேன். அப்போதும் கமல் என்னிடம் பிரச்சினை குறித்து கேட்கவே இல்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்சினையையே தீர்த்து வைக்க கமலால் முடியவில்லை.

மக்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பார்?
அப்படியிருக்கும் போது அவர் எப்படி மக்கள் பிரச்சினையை தீர்ப்பார்? மக்கள் நீதி மய்யம் பேருக்கு மட்டும்தான் மக்களுக்கு எந்த நீதியும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் எனக்கும் பாலாஜிக்கும் பிரச்சினை உச்சபட்சத்தில் இருந்த போது எனக்கு சிம்புவாகவே போன் செய்து அவரது தங்கைக்கு சொல்வது போல் அறிவுரை வழங்குவதாகவே சொல்லி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். என் தரப்பு நியாயங்களையும் கேட்டார். ஆனால் கமல் எனக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என நித்யா தெரிவித்துள்ளார். கமல் குறித்து நித்யா இவ்வாறு கூறிய நிலையில் பாலாஜியோ குழந்தையை போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு இருவரும் அவ்வப்போது போய் பார்த்து வருமாறும் இருவராலும் முடியாவிட்டால் நான் போய் பார்ப்பதாகவும் தெரிவித்ததாக பாலாஜி நெகிழ்ச்சியாக கூறினார்.












Click it and Unblock the Notifications