Thalaivan Thalaivi 1st Day Box Office: விஜய் சேதுபதியின் கம்பேக்! - வசூலில் முதல் நாளே மாஸ் காட்டிய தலைவன் தலைவி
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று (ஜூலை 25) வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூலைக் குவித்து, விஜய் சேதுபதிக்கு ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான அவரது இரண்டாவது படமான இது, ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த ஆண்டு மே மாதம் ரிலீசான 'ஏஸ்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் விஜய் சேதுபதி. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர் முழு நம்பிக்கையுடன் களமிறங்கிய 'தலைவன் தலைவி' திரைப்படம், உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பாண்டிராஜின் நேர்த்தியான இயக்கத்தில், நித்யா மேனன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, மைனா நந்தினி, தீபா, ஆர்.கே.சுரேஷ், விவேக் பிரசன்னா போன்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமும் இதில் இணைந்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ரசிகர்களின் அமோக வரவேற்பு
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப உறவுகளின் சிக்கலான பக்கத்தையும், காதலையும், யதார்த்தத்தையும் பாண்டிராஜ் மிக அழகாகப் படமாக்கியிருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர். "நீண்ட நாட்களுக்குப் பின்னர் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு அழகான படமாக 'தலைவன் தலைவி' வந்திருக்கிறது" என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் நாள் வசூல்
'தலைவன் தலைவி' படத்திற்குப் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, ரிலீஸ் ஆன முதல் நாளில், இந்திய அளவில் "ரூ.4.15 கோடியை" வசூலித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3 கோடி வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'ஏஸ்' திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய்கூட வசூலிக்காத நிலையில், அதைக்காட்டிலும் 'தலைவன் தலைவி' படம் வசூலில் தூள் கிளப்பி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாதத்தில் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில், முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் 'தலைவன் தலைவி' படைத்துள்ளது.

உலகளவில் வசூல் வேட்டை
'தலைவன் தலைவி' திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், ஓவர்சீஸிலும் இப்படம் முதல் நாளில் ரூ.2 முதல் 3 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இப்படம் உலகளவில் முதல் நாளில் 6.5 முதல் 7 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளியதை போல், இந்த ஆண்டு 'தலைவன் தலைவி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்து சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ஒரு கம்பேக் படமாக அமைந்திருப்பது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications