Thalaivan Thalaivi OTT: விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி" ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
சென்னை: விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.
விஜய் சேதுபதி நடித்த கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்த ஆண்டின் அதிகம் வசூலித்த படங்களில் உள்ளது.

குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து ஏகோபித்த ஆதரவை கொடுத்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ஒவ்வொரு படங்களும் திரையரங்குகளில் ரிலீசான பிறகு, குறிப்பிட்ட கால இடைவேளைக்கு பிறகு ஓடிடியில் வெளியாகிறது.
திரையரங்குகளில் படத்தை பார்த்தாலும் ஓடிடியில் பார்ப்பதையும் வழக்கமாக சிலர் கொண்டிருக்கிறார்கள். அது போல் சிலர் ஓடிடியில் மட்டுமே பார்க்கலாம் என பட்ஜெட்டை கருத்தில் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த ஓடிடி தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏஸ் படத்தின் தோல்வியை சரிக்கட்டும் வகையில் இந்த படத்திற்கு பிரம்மாணடமான வரவேற்பை ரசிகர்கள் வாரி வழங்கியுள்ளனர். விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் இந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.
காதல், பிரிவு, தவிப்பு, புரிதல் உள்ளிட்ட உணர்வுகளை பேசும் படமாக இது உள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பொட்டல மிட்டாய் பாடல், படம் ரிலீஸுக்கு முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த படத்தில் சரவணன், தீபா, காளி வெங்கட், யோகிபாபு, ரோஷினி ஹரிப்பிரியன், சென்ட்ராயன், பாபா பாஸ்கர், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரூ 75 கோடி வசூலை கடந்துவிட்டதாம். விரைவில் ரூ 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு குழந்தை நடித்திருந்தது. அந்த குழந்தைக்கு இந்த படத்தில் போட்ட மொட்டைதான் முதல் மொட்டை என அக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும் தங்களை சாதாரணமாக நினைக்காமல் ஷூட்டிங்கின் போது நிறைய நேரம் கேரவனை பயன்படுத்த நித்யா மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அனுமதி கொடுத்தனர் என நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications