Thangam Serial: ஆயக்குடி குடும்பத்தை ஐயாகிட்டே இருந்து பிரிக்கணும்....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் தங்கம் சீரியல் மதியம் 2:30 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது. நடிகர் விஜயகுமார், நடிகைகள் மஞ்சு பார்கவி, சீமா, அனுராதா இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், காவேரி உள்ளிட்டவர்கள் நடித்து உள்ளனர்.

விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் மஞ்சு பார்கவி, இன்னொருவர் நடிகை சீமா. விஜயகுமார் தங்கையாக நடிகை அனுராதா நடித்து உள்ளார்.

விஜயகுமாரை அந்த கிராமமே ஐயா ஐயா என்று கூப்பிடுகின்றனர். வீட்டிலும் எல்லாரும் ஐயா ஐயான்னுதான் அழைக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் ஆயக்குடி குடும்பத்தை விட்டு ஐயாவைப் பிரிக்கணும் என்று ஐயாவின் தங்கை புருஷன் வன்மம் வளர்க்கிறார்.

விஜயகுமாரின் நிஜ கதையோ

விஜயகுமாரின் நிஜ கதையோ

நடிகர் விஜயகுமாரின் நிஜக்கதையை சீரியலாக எடுத்தது போல, தங்கம் சீரியலில் இவருக்கு இரண்டு மனைவிகள். இரு மனைவிக்கும் பிள்ளைகள், முதல் மனைவிக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.. இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் பிள்ளைகள். இப்படி ஆரம்பிக்கிறது சீரியல் கதை.

வருடங்கள் பல கடந்து

வருடங்கள் பல கடந்து

ஆயக்குடி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பம் ஐயாவின் இரண்டாவது சம்சாரம் மஞ்சு பார்கவி குடும்பம். இவருக்குத்தான் ரம்யா கிருஷ்ணன் , சான்டரா பிரஜன் உட்பட மூன்று பெண்கள். இதில் ரம்யா கிருஷ்ணன் பேர் கங்கா. கங்காவுக்கு கல்யாணம் ஆகும் வயது கூட் வந்துவிட்டது. அப்போதுதான், முதல் மனைவியின் பிள்ளைகள் ஆயக்குடி குடும்பத்தை ஐயாவிடம் இருந்து பிரிக்கணும் என்று கருவுகிறார்கள்.

கதை இருந்தால் இதுவும்

கதை இருந்தால் இதுவும்

சீரியல் கதை என்று ஒன்று இருந்தால், அதில் குடும்பத்தை கெடுக்க, கருவறுக்க வில்லன்,வில்லிகள் என்று வேண்டும் என்பது சீரியலில் எழுதப்படாத விதி போலும். பிள்ளைங்களை வளர்ந்து கல்யாணத்துக்கு நிக்கறாங்க.. இப்போது போயி ஐயாவின் தங்கை புருஷன், கங்கா குடும்பத்தை ஐயாவிடம் இருந்து பிரிக்கணும்னு சபதம் எடுக்கறார்.

நிஜத்தில் இப்படி இருந்தால்

நிஜத்தில் இப்படி இருந்தால்

நிஜத்தில் இப்படி இருந்தால், அதை காலாகாலத்தில் பஞ்சாயத்து பேசி எதாவது ஒன்றை செய்து விடுவார்கள். ஊருக்கு தலை குடும்பமாம்...அவருக்கு ரெண்டு பொண்டாட்டியாம்...இரண்டு குடும்பத்தோடு ஐயா சந்தோஷமாக வாழ்கிறாராரம்...இதை தினம் பார்க்கும் சீரியல் என்று அப்போதே ஒளிபரப்பியது தவறு...இப்போது மறு ஒளிபரப்பில் வேறு....கொடுமை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+