Thazhampoo Serial: அடடா... கடைசியில் ரக்ஷனும் தாழம்பூ வாசனையில்!
சென்னை: டிவி சீரியல்களின் புது வரவுகள் வந்துவிட்டால் அதை முன்னேற்றும் முயற்சிகளில் சேனல்கள் பழைய சீரியல்களை இரண்டாவது முறை ஒளிபரப்புவதில் நேரத்தை ஒதுக்காமல் அந்த நேரத்தில் புது சீரியல்களை ஒளிபரப்புகின்றன.
விஜய் டிவியின் புது சீரியலாக தாழம்பூ சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதை இரண்டாவது முறையாக மதிய நிறத்தில் :3 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது. நாகலோகம், நாக குளத்தின் தலைவன் என்று கதை போகிறது.
அது மட்டுமா நாக ரத்தினம் என்று ஒரு கல்லை வைத்து வழக்கமாக கதையை பின்னாமல் நாக தேவர்கள் பூஜை செய்த ஆத்ம லிங்கம் பூலோகத்தில் உள்ளது என்று கதையை கொண்டு போகிறார்கள்.

கை விடாது
நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு உதாரணமாக விஜய் டிவியை சொல்லலாம். என்னதான் இதை பலர் நக்கல் செய்தாலும், உண்மை அதுதான். இந்த சேனலில் புகழடைந்து, இதையே நம்பி இருக்கும் யாரையும் அவ்வளவு எளிதில் கை விட்டுவிடாது விஜய் டிவி.

தொகுப்பாளர் டிடி
தொகுப்பாளர் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவயதர்ஷினி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவி ஒன்றை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறார். 10 வது படிக்கும் போதே விஜய் டிவியின் தொகுப்பாளர் ஆனவர் இவர். இன்னும் விஜய் டிவியின் சிறப்பு தொகுப்பாளினி என்கிற அந்தஸ்துடன் விஜய் டிவியின் ராணியாக வலம் வருகிறார்.

ஜாக்குலின் ரக்ஷன்
விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க அறிமுகம் ஆனவர்கள் தொகுப்பாளர்கள்; ரக்ஷனும், ஜாக்குலினும். ஜாக்குலின் ஆங்கரிங் செய்துக்கொண்டு இருக்கும் போதே கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.அதில் நடித்து புகழும் அடைந்தார் ஜாக்குலின்.இப்போது இதே டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலின் நாயகியாக நடித்து வருகிறார்.

ரக்ஷனும் இப்போது
இப்போது ரக்ஷனும் விஜய் டிவியின் தாழம்பூ சீரியலில் நடித்து இருக்கார்.இவர் ஆங்கரிங் செய்து வந்த ஷோவும் தற்போதைக்கு இல்லாத பட்சத்தில் விஜய் டிவி இந்த வாய்ப்பை இவருக்கு தந்து இருக்கிறது. கதாநாயகி ரேவதி ரொம்ப செல்லமாக வளரும் பணக்கார வீட்டு பெண்.இவரை பெண் பார்க்கக் வந்து மாப்பிள்ளையாக தலை காட்டி இருக்கும் ரக்ஷன் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பார் என்றே தெரிகிறது.

ரேவதிக்கு மட்டுமே
ரேவதி வீட்டில் நாகலோகத்தின் ஆத்ம லிங்கம் இருக்கிறதாம். அதைத் தொட்டு பூஜை செய்யும் சக்தி ரேவதியிடம் மட்டுமே இருக்கிறது என்றும், அதனால் வீட்டோடு மாப்பிள்ளை என்று ரேவதிக்கு வீட்டார் பார்ப்பது போலவும் கதை ஆரம்பித்து இருக்கிறது. குடும்பம்கூட்டு குடும்பம் என்று அமர்க்களப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications