நீயா நானாவில் நேற்று நடந்த விவாதம்.. "நடிகரின்” ரசிகர்களுக்கு வைத்த குட்டு! பின்னணி விஷயம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் என்கிற நடிகர் முதலமைச்சராகி இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நேற்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி சோசியல் மீடியா முழுக்கவே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வந்த சமயத்திலேயே இதைப் பற்றி பலரும் பேசத் தொடங்கி விட்டனர். இதில் எந்த இடத்திலும் விஜய்யின் பெயர் சொல்லவில்லை என்றாலும் ரசிகர்கள், இந்த நிகழ்ச்சி விஜய் பின்னால் சுற்றும் ரசிகர்களை விமர்சிக்க தான், அதற்காகத்தான் விஜய் ரசிகர்களை கூட்டிக்கொண்டு வந்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Neeya Naana Vijay TV

நீயா நானா எபிசோடு

இந்த வார எபிசோடில், ஒரு பிரபலத்தின் மீதுள்ள மிகையான அபிமானம் பற்றிய இரு தரப்பு விவாதம் தான். பிரபலம் என்றதும் நீங்கள் விளையாட்டு வீரரோ, அறிஞரோ, எழுத்தாளரோ என்று நினைத்து விடாதீர்கள். அது சினிமா நடிகர்கள் என்பதுதான் இங்குள்ள துரதிஷ்டம். இப்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும் ரிலீஸ் போட தெரிந்தவர்கள், சோசியல் மீடியா பிரபலம், சில படங்களில் நடித்து விட்டால் சினிமா பிரபலம். அவர்களுடைய செல்பி எடுப்பதற்காக மக்கள் அவர்கள் செல்லும் இடம் எல்லாம் ஓடோடி குவிந்து விடுகிறார்கள்.

இதில் பல உயிரிழப்பு நடந்தாலும் கூட அதை துச்சமாக நினைக்கிறார்கள். போருக்கு போய் வீர மரணம் அடைந்தது போல நடிகரை பார்க்க போய் இறந்தவர்களின் மரணத்தையும் சிலர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் வேதனையான சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்கும்போது, இதை வைத்தே இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கல்லா கட்டி விட்டார்கள். இந்த வார நிகழ்ச்சியில் ரசிகர்கள் "அண்ணன்... அண்ணன்" என்று சொல்லும் போது வார்த்தை மியூட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அந்த இடத்தில் விஜய் பெயர்தான் என்பது பார்க்கும் நமக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

Neeya Naana Vijay TV

நடிகருக்காக தற்கொலை முயற்சி

அதிலும் ஒரு பெண் சொன்ன விஷயம் தான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் என்றதும் இளம் பெண் என்று நினைத்து விட வேண்டாம், அந்த பெண்ணின் மகனுக்கு இப்போது 19 வயதாகி விட்டது. ஆனால் அவர் ஸ்கூல் படிக்கிற டைமில் படிப்பை விட ஒரு நடிகர் மீது தான் அதிக அன்பு வைத்திருந்தாராம். அந்த நடிகரின் பாடல் ஒலித்தால் தான் காலையில் தூங்கியே முழிப்பாராம். அவங்க அம்மா எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டாராம்‌. யார் என்ன சொன்னாலும் எழுந்திருக்கவே மாட்டாராம். நைட் தூங்கும்போதும் அந்த நடிகரின் பாட்டு கேட்டு தான் தூங்குவாராம்.

அதுபோல வீட்டு சுவற்றில் 6 அடிக்கு அந்த நடிகரின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருந்தாராம். இதை பார்த்து கடுப்பான அவருடைய அண்ணன் ஒருநாள் அந்த போஸ்டரை கிழித்திருக்கிறார். உடனே இவருக்கு கோபம் வந்து விட்டதாம். எனக்கு பிடித்த நடிகர் போஸ்டரை நீங்க கிழிச்சிட்டீங்களே என்று தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். அப்போது தெருவில் போனவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். பிறகு அவர் உயிர் பிழைத்திருக்கிறார். இதற்கு மீது மேல் இவரை விட்டு வைத்தால் சரிப்பட்டு வராது என்று இவருடைய படிப்பையும் நிறுத்தி 15 வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். அதை தான் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Neeya Naana Vijay TV

கோபிநாத் கேட்ட கேள்வி

கல்யாணத்திற்கு பிறகு எனக்கு ரொம்பவும் ஃப்ரீடம் கிடைத்துவிட்டது, என்னுடைய கணவர் எனக்கு பிடித்த நடிகரின் போஸ்டரை ஒட்டினாலும் ஒன்னும் செய்ய மாட்டார், போட்டோக்கள் சேர்த்து வைத்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கோபிநாத் அவரிடம் நடிகர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பினால் நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தீர்களே? அதே விஷயத்தை இப்போ உங்களுடைய மகன் செய்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நீங்க தற்கொலை முயற்சி செய்யும்போது வலிக்கிறது என்றதும் காப்பாற்ற வந்தது யாரு? அந்த நடிகரா அல்லது பக்கத்தில் உள்ளவர்களா? என்று கேட்டதும் அந்தப் பெண்ணால் எதுவுமே பேச முடியவில்லை.

அதுவரைக்கும் அவ்வளவு பெருமையாக பேசிக் கொண்டிருந்தார், பிறகு முகத்தில் சோகத்தோடு என்னுடைய பையன் அதுபோல செய்தால் எனக்கு கஷ்டம் தான். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல நான் தற்கொலை முயற்சி செய்ததும் தெருவில் போனவர்கள் தான் வந்து உதவி செய்தார்கள் என்று பேசி இருக்கிறார். ரசிகர்கள் மீது அன்பு வைத்திருக்கும் பக்கத்தில் இருந்த பலர் பேசியதை கேட்டு கோபிநாத் கடுப்பாகி, உங்ககிட்ட இருந்து எந்த பதிலுமே சரியா வரல. எதுவுமே தெளிவாக இல்லையே தம்பி என்று சலிப்பாக சொல்லி இருந்தார்.

எதிர்தரப்பின் பதிலடி

இதில் ஒரு வேதனை என்னவென்றால் பிரபலங்களின் மீது அன்பாக இருக்கும் ரசிகர்கள் தாங்கள் செய்யும் அல்லது தங்களுக்கு மனதிற்குள் இருக்கும் அபிமானத்தை மறைப்பதற்காக தங்களின் குடும்பம் சுற்றத்தார், வீட்டில் உள்ள அனைவரையுமே வில்லன்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் பேசும்போது எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வலி, துயரம், துக்கம் இருந்துச்சு எங்களை சுற்றி இருக்கிற யாருமே எங்களுக்கு உதவவில்லை. அந்த நேரத்தில் எங்க அண்ணன் பேச்சு தான் இன்ஸ்பெயராக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் எதிர்தரப்பில் இருந்தவர்களும் லேச பட்டவர்கள் அல்ல. பிரபலங்கள் பின்னால் அதீத அன்போடு சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு அட்வைஸ்களை அள்ளித் தெளித்தனர். ஆனால் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு தான் புரிந்ததா என்பது அவர்களுக்கு தன் தெரியும். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. அப்போது கூட விஜய் டிவி வேணும்னே விஜய்யை டார்கெட் செய்து பேச வைத்து விட்டார்கள் என்று பலரும் சொன்னார்கள்.

Neeya Naana Vijay TV

விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை

அதாவது அப்போது விஜய் சேதுபதி, பதவிக்கு வருவதற்கு முன்பு அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு பதவிக்கு வந்த பிறகு பிரச்சனை என்றதும் எதிர் கட்சியின் மீது பழியை போட்டு விட்டு ஓடுவது லீடர்ஷிப் கிடையாது என்று சொல்லியிருந்தார். அந்த சமயத்தில் தான் சட்டசபை நடந்து கொண்டிருந்தது அப்போது முதல்வர் விஜய் ஒரு நாள் அவசரமாக சட்டசபையில் இருந்து வெளியே வந்ததை வைத்து விஜய் சேதுபதி இப்படி பேசி விட்டார் என்று திட்டி தீர்த்து வந்தனர். அதற்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் சேனல் தரப்பினரும் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தனர்.

இந்த பஞ்சாயத்து முடிந்த சில மாதங்களில் இப்போது நடிகரின் பின்னால் சுற்றும் ரசிகர்களை ரோஸ்ட் செய்ற மாதிரி நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். இதை பார்த்ததும் மீண்டும் விஜய்யை விமர்சிக்கத்தான் இந்த நிகழ்ச்சியா? என்று இப்போ பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியை நீங்க பார்த்தீங்களா? இந்த விவாதத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க!?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+