பாவனியை தான் பயந்த பொம்மையோடு கம்பேர் செய்த ராஜு.... பக்கா 90ஸ் கிட்ஸ் என்று நிரூபிக்கிறாரே!!!
சென்னை: பாவனி மற்றும் ராஜூ இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் ராஜு கூறிய எடுத்துக்காட்டு பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
ராஜு தான் ஒரு 90ஸ் கிட்ஸ் என்பதை நிரூபித்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சின்னத்திரை கதாநாயகன்
சின்னத்திரையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ராஜுவுக்கு வெள்ளித்திரை கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ராஜு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனை அவர் தான் வெற்றி பெறுவார் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் ஆளாக பாதுகாக்கப்படும் நபர்
ஒருசில ஷார்ட் பிலிம்களிலும் இவர் இயக்கியுள்ளார். ஒரு துணை இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தாலும் இந்த அளவிற்கு பெயர் வாங்காமல் இருந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளார். இவருடைய நகைச்சுவைத் திறன் மற்றும் டைமிங் காமெடி பலரையும் கவர்ந்துள்ளது. எந்த ஒரு சீரியஸான நேரத்திலும் இவருடைய அசால்ட்டான காமெடியால் பல ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர். அதனாலே இவர் நாமினேஷனில் வரும் ஒவ்வொரு வாரமும் அதிகமான ஓட்டுகளை பெற்று முதல் ஆளாக சேவ் ஆகி விடுகிறார்.

பிடிக்காத காரணம்
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ராஜூக்கு பாவனியை மட்டும் தான் பிடிக்கவில்லை என்று கூறி வருகிறார். பல நேரங்களில் அதை முகத்திற்கு நேராக கூறிவிடுகிறார். நேற்றைய நாமினேஷனில் கூட தனக்கு பிடிக்காத காரணத்தை கூறி அனைவரையும் மிரள வைத்து விட்டார். ஆரம்பத்திலிருந்து பாவனியிடம் பழகுவதற்கு பயமாகத்தான் இருக்கிறது, அவர் எப்போது எப்படி பேசுவார் என்று எனக்கு தெரியாது அதனால் நான் விலகியே இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
Recommended Video

ஓ இதுதான் பயமா?
90ஸ் கிட்ஸ்களின் திரில்லிங்கான திரைப்படங்களில் ஒன்று வா அருகில் வா திரைப்படம். இந்த திரைப்படத்தில் பொம்மையை வைத்து காட்டி மிரட்டி விடுவார்கள். பேயை காட்டினால் கூட இந்த அளவிற்கு பயம் இருந்திருக்காது ஆனால் அந்த பொம்மையை பார்த்ததுமே அனைவருக்கும் பயம் தோன்றி விடும். அந்த அளவிற்கு மிரட்டலான திரைப்படத்தில் வரும் பொம்மையை போல பாவனி இருக்கிறார் அதனால் அருகில் வருவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதைவைத்து ரசிகர்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications