முதலாவதாக காப்பாற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்...இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலேயே ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கிறது என்று கமல் கூறிய பிறகு ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் முதலாவதாக காப்பாற்றப்பட்ட போட்டியாளர்களின் பெயர்களை பார்த்ததும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.
அதுவும் மூன்று வாரம் தொடர்ந்து இதே போட்டியாளர் முதலாவதாக சேவ் ஆவதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் நம்பிக்கை
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியும் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது கமல் பேசியது பெரிய பல்பு கொடுத்ததாக இருக்கிறது. ரசிகர்கள் பலர் உறுதியாக அடித்துக் கூறிக் கொண்டிருந்தனர். இந்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனின் பிறந்த நாளாக இருப்பதால் எப்படியும் சலுகை கொடுத்து இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கடைசியில் கூறி விடுவார்கள் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்தனர்.

இதை எதிர்பார்க்கலையே
எலிமினேஷன் இருக்காது என்பதை போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் அனைவருக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி தற்போது கமல் பேசி விட்டாலும், தற்போது இன்று முதலாவதாக சேவ் ஆகும் போட்டியாளர்கள் விபரம் வெளியாகி இருக்கிறது. அதைக் கேட்டதும் பல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்துகொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

காப்பாற்றப்பட்ட போட்டியாளர்கள்
இந்த வார எலிமினேஷனில் ஒன்பது போட்டியாளர்களின் பெயர்கள் இருந்தாலும் இரண்டு போட்டியாளர்களின் பெயரை இன்றைய எபிசோட்டில் கமல் சேவ் பண்ணி இருக்கிறார். நிரூப் மற்றும் இசைவாணியின் பெயர்கள் தான். இவர்கள் இருவரையும் இந்த வாரத்தில் முதல் போட்டியாளர்களாக சேவ் செய்திருக்கிறார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கடந்த மூன்று வாரங்களாக எலிமினேஷனில் தன்னுடைய பெயர் இருந்தாலும் முதல் ஆளாக இசைவாணி யின் பெயர்தான் சேவ் ஆகி வருகிறது. இதை பார்த்ததும் நெட்டிசன்கள் ஒரு பக்கமாக கலாய்க்க தொடங்கி விட்டனர்.

ரசிகர்களின் ஆதரவு
என்னதான் இசைவாணி முதலாவதாக இந்த வாரம் சேவ் ஆனாலும் இனி இதை வைத்து சக போட்டியாளர்கள் இவரிடம் என்ன செய்யப் போகிறார்களோ என்று பலர் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் பலர் இசைவாணி எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்க மாட்டேங்கிறார். எதுவும் சரியா தவறா என்று பலமுறை யோசித்து கொண்டே இருக்கிறார். என்று இவர் மீது குற்றச்சாட்டை கொண்டிருக்கும்போது ரசிகர்கள் இவருக்கு இந்த அளவிற்கு வாக்களித்து இவரை தக்கவைத்து கொண்டிருப்பதில் இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications