பிரண்ட்ஸ் படத்தில் வந்த வீட்டை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய், சூர்யா வடிவேலு உட்பட பலர் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கும். ஆனால் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வீடு பற்றிய தகவல் இப்போது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் வீடு பல படங்களில் வந்திருக்கிறது அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு அமைதியான கிராமம்... ஆனால் அந்த இடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயமானது. காரணம் - அங்கே இருக்கும் ஒரு பழமையான ஜமீன் பங்களா. பல ஹிட் படங்களில் பார்த்த அந்த "பேலஸ் வீடு" உண்மையில் எங்கே இருக்கிறது? என்ன வரலாறு? என்னென்ன படங்கள் எடுத்திருக்காங்க? என்ற தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

எங்கே இருக்கிறது இந்த பங்களா?
இந்த புகழ்பெற்ற ஜமீன் பங்களா திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பழனியில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
கிராமத்தில்"ஷூட்டிங் வீடு" என்று சொல்லினால் உடனே காட்டிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்த வீடு சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான இடமாக மாறியுள்ளது.

ஜமீன் வரலாறு
இந்த பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு முக்கிய ஜமீன் மையமாக இருந்தது. அதனால் தான் இந்த பகுதி "நெய்க்காரப்பட்டி ஜமீன்" என்று அழைக்கப்பட்டது.
1956-ல் ஜமீன் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு, பெரும்பாலான சொத்துகள் அரசுடமையாக மாறின. ஆனால் இந்த பங்களா மட்டும் இன்னும் அந்த ஜமீன் குடும்பத்தினரிடமே உள்ளதாம். கடைசியாக ஜமீனாக இருந்தவர் நரேந்திர குல்லம நாயக்கர் என கூறப்படுகிறது. இந்த வரலாறு தான் இந்த வீட்டுக்கு ஒரு தனி பெருமையை கொடுக்கிறது.
200க்கும் மேற்பட்ட படங்கள்
இந்த பங்களாவில் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் சீரியல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சில தமிழ் படங்கள்:
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் பணக்கார வீடு தான் இது. அதேபோல நடிகர் தனுஷ் நடித்த உத்தம புத்திரன் படத்தில் பெரிய கவுண்டர் வீடாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டது.
வாழ்த்துக்கள் படத்தில் ஹீரோயின் (பாவனா) வீடாக காட்டப்பட்டது. பேரரசுவில் விஜயகாந்த் வீடு, கண்டேன் காதலை படத்தில் தமன்னா வீடாக இந்த பங்களா தான் காட்டப்பட்டதாம். மேலும் வில்லு, சூரியவம்சம் (பெரிய சரத்குமார் வீடு), மாயி (விஜயகுமார் வீடு), பாட்டாளி (முழு படமும் இந்த பங்களாவில்) இப்படி பட்டியல் நீளமாகவே போகும்.

விண்டேஜ் கார்கள்
இந்த பங்களாவை சுற்றி பார்க்கும்போது, வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பழைய கால விண்டேஜ் கார்கள் கண்களை கவரும். பல வருடங்களுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகின்றன. இது அந்த ஜமீன் குடும்பத்தின் பழைய செல்வச் சின்னம். சினிமா ஷூட்டிங்குகளிலும் சில நேரங்களில் இந்த கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
சினிமா ஷூட்டிங்குக்கு ஏற்ற லொகேஷன், கிராமத்து மற்றும் செல்வந்த வீட்டு லுக் இரண்டும் ஒரே இடத்தில் கிடைப்பதால் தான் இயக்குநர்களின் முதல் தேர்வாக இது வீடு மாறியது.
நெய்க்காரப்பட்டி ஜமீன் பங்களா என்பது ஒரு சாதாரண வீடு அல்ல. சினிமா ரசிகர்களுக்கு நினைவுகள் நிறைந்த லொகேஷன். இன்னும் உயிருடன் இருக்கும் ஒரு பழைய காலத்தின் சின்னம். நீங்கள் பார்த்த பல படங்களின் காட்சிகள் ஒரே இடத்தில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் அந்த காட்சிகளை நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.
-
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications