• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kalyana Veedu Serial: கல்யாண வீடு கலகலப்பே இல்லையே...திக் திக்னு இருக்கு!

|

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கடந்த ஒரு மாசமாவே கலகலப்பு என்பது கொஞ்சமும் இல்லை. 7:30 மணி நேரம் என்பது சன் டிவியில் ரொம்ப சீரியசான நேரமாகிப் போச்சு. பல டென்ஷானோட வீட்டுக்குள் நுழைந்தால் சிவகாமி அம்மாவின் எமோஷனல் கத்தல் ஐயோன்னு இருக்குது.

சரி, இங்கேதான் இப்படின்னா ஸ்வேதா புருஷன் சந்தேகத் தீயில் வெந்து, நடு ராத்திரி படுக்கையை விட்டு எழுந்து வந்து செய்யும் அட்டகாசம் இருக்குதே.. பார்க்கவே பகீர்னு இருக்குது. தனது பேன்ட், ஷர்ட், துண்டு எல்லாத்தையும் தூக்கில் தொங்குவது போல செட்டப் செய்துட்டு, எப்படி ரியாக்ஷன் தராங்கன்னு ஒளிஞ்சு இருந்து பார்க்கிறான்.

பூதக்கண்ணாடி வச்சுப் பார்த்து இந்த மாதிரி கதாபாத்திரங்களை கதையில் புகுத்தி இருப்பது சாரி கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது திருமுருகன். பலருக்கும் மனசுக்குள் பதைபதைப்பை உண்டாக்கிருது. ரொம்ப நேரம் அந்த தாக்கம் மனதை பிசைகிறது.

பிள்ளைக்கடன் ஈமக்கடன்

பிள்ளைக்கடன் ஈமக்கடன்

தந்தை இறந்துவிட்ட நிலையில், பிள்ளை தந்தைக்கான ஈமச்சடங்கு செய்வது தலையாய கடமை. தந்தை தனக்கு என்ன செய்தார், அவருக்கு எதற்காக நான் இதை செய்ய வேண்டும் என்கிற வீராப்பு, கேள்விகள் எல்லாம் இங்கு மருந்துக்கும் இருக்கக் கூடாது. ஆனால், இங்கு கோபியிடம் சிவகாமி இதோடு விட்டுட்டு இந்தப் பக்கம் வந்துரு. அப்போ நான் உன்னை மகன்னு ஏத்துக்கறேன்னு சொல்றாங்க.

Pandian Stores Serial: ஒரு வீட்டுக்குள்ள புருஷன் பொண்டாட்டி இப்படியும் காதலிக்க முடியுமா?

உயிரை காலில் விழுந்து

உயிரை காலில் விழுந்து

அவர் என்னை ஆக்சிடென்ட் வழக்கில் இருந்து காப்பாற்றி இருக்கார். இல்லேன்னா நான் இந்நேரம் ஜெயிலில் இருந்து இருப்பேன். அந்த மனுஷன், தனக்கான ஈம காரியங்களை செய்துரு கோபின்னு சொல்லி என் காலில் விழுந்து அப்படியே உயிரை விட்டுட்டார். என்ன பண்ண சொல்றீங்க. நான் அவருக்கான ஈம காரியங்களை செய்தே ஆகணும்னு கோபி புறப்பட்டு போறான்.

ஆ ன்னு கத்தறாங்க

ஆ ன்னு கத்தறாங்க

எல்லாரும் கோபத்தில் வீட்டுக்குப் போயி அமர்ந்து இருக்க, திடீர்னு ஆ ன்னு கத்தறாங்க சிவகாமி அம்மா. என்னவோ எதோ என்று பதறிப்போய் எல்லாரும் ஓடிவர.. பொண்டாட்டியா அந்தாளு சேர்த்துக்கிட்டவகிட்டே தோத்துப் போனேன். இப்போ ஒரு தாயா மறுபடியும் அவகிட்டே தோத்துப் போயிட்டேன்னு ஹை பிச்சுல கத்தி அழறாங்க.

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்

எல்லாத்துக்கும் ஒரு காலக் கட்டத்துல காலம் பதில் சொல்லும். காயத்துக்கு மருந்து கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஆனால், இத்தனை வருஷத்துக்குப் பிறகும் சிவகாமி அம்மா புருஷன் தனக்கு செய்த துரோகத்தை மனசில் வச்சுக்கிட்டு, அவர் இறந்த பிறகும், பிள்ளை செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் தடுப்பது அந்த அம்மாவின் வயதுக்கு சரியானதாகத் தெரியவில்லை.

சந்தேகம் ஆபத்து

சந்தேகம் ஆபத்து

புருஷன் பொண்டாட்டிக்குள் சந்தேகம் என்பது கொடிய வியாதி, கடுமையான ஆபத்து என்று இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இதை படம் வரைந்து பாகங்களைக் குறி என்பது போல விலாவரியாக விசித்திரமான கேஸை எடுத்துக்கொண்டு காண்பித்து இருப்பது நிஜமா தேவையில்லை. இன்னும் இன்னும் பார்ப்பவர்களை டிப்ஷன் மன நிலைக்கு ஆளாக்கிவிடும். பார்ப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...!

 
 
 
English summary
Sun TV's kalyana veedu serial has been a riot in the past. 7:30 pm is the perfect time for Sun TV. Sivakami's mother's emotional shout-out to Ioannu as she enters the house with several tents.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X