ரொம்ப பிரச்சனைனா... ரியல் ஜோடியை சேர்த்துருங்க!
சென்னை: சன் டிவி சீரியலில் நடிக்கும் சில நடிகைகள், சீரியல் நடிகர்களையே திருமணம் செய்துக்கொண்டும் சீரியல்களில் நடித்து வருகின்றனர்.
என்னதான் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக அவர்கள் இருந்தாலும், ஒரே சீரியலில் ஜோடி சேர்ந்து நடிக்க சன் டிவியில் அனுமதி இல்லை.
கணவன் ஒரு சீரியலிலும், மனைவி ஒரு சீரியலிலும் என்றுதான் நடித்து வருகிறார்கள். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்றே அவர்கள் அனுபவத்தில் பேசப்படுகிறது.

விஜய் டிவி சானல்
விஜய் டிவி ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியானவர்களுக்கு அவர்களின் கஷ்டங்கள் உணர்ந்து, இருவருக்குமே ஜோடியாக நடிக்க பல வாய்ப்புக்களை பலருக்கும் தந்து இருக்கிறது.இதில் செந்தில் ஸ்ரீஜா ஜோடியை சொல்லலாம். திருமணத்துக்குப் பிறகும் இவர்களை ஜோடி சேர்ந்து நடிக்க வச்சு அழகு பார்த்தது விஜய் டிவி.

மதுர சரவணன் மீனாட்சி
மதுர சீரியலில் ஆர்.ஜெ.செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடி சேர்ந்து நடித்து, சூப்பர் ஹிட் ஆனது அந்த சீரியல், அடுத்துசரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். சரவணன் மீனாட்சி அடுத்த சீசனில் இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர். காரணம் கேட்டபோது, ஒரு முறை ஹிட் கொடுத்தாச்சு. இனி அதே சீரியலில் சீசன் என்று மாற்றி நடிக்கும்போது ஹிட் கொடுக்க முடியுமோ என்னவோ... ஆனால், இதே நல்ல பெயரோடு ஒதுங்கி விடலாம் என்று ஒதுங்கி விட்டதாக கூறினார்கள்.

இருவரும் திருமணம்
செந்தில், ஸ்ரீஜா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் விஜய் டிவியில் மாப்பிள்ளை என்று ஒரு சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்தனர். இப்படி புகழ்பெற்ற ஜோடியை, ரீல் ஜோடியாகவும் ஸ்க்ரீனில் நடிக்க வைக்கும்போது பல பிளஸ் இருப்பதாகவே விஜய் டிவி நினைத்தது.

சிறப்பு நிகழ்ச்சி
சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாலும் கூட விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்களின் ரியல் ஜோடியை ஒன்று சேர்த்து வைத்து அந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள். அப்படி ரியல் ஜோடியாக வந்த திருமதிகள் பலரும் இப்போது சோலோவாக விஜய் டிவியில் சமையல் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார்கள்.

ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவியும் விஜய் டிவியின் ஃபார்முலாவை கடைப்பிடித்து வருகிறது.இப்போது ஒளிபரப்பாகி வரும் நாச்சியாள்புரம் சீரியலில் ரக்ஷிதா தினேஷ் தம்பதி சீரியலிலும் ஜோடியாக நடிக்கின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணி புரியும்போது பல பிளஸ் இருப்பதாக சீரியல் எடுப்பவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த பாணியை
இந்த பாணியை இப்போதுதான் கையில் எடுத்து இருக்கிறது சன் டிவி. அதுவும் பல இன்னல்களை அனுபவித்த பின்னரே இந்த பாணிக்கு வந்து இருக்கிறது என்று சொல்லலாம். விகடன் டெலிவிஸ்டாஸ் ரன் சீரியலில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடி சாயா சிங்கை நடிக்க வைத்து அழகு பார்த்தது சன் டிவி, இந்த ஜோடியை கொண்டாடும் விதத்தில் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் பிளசண்டான ரீல் பிளஸ் ரியல் ஜோடி என்கிற விருதையும் வழங்கி கவுரவித்து இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications