CWCஇல் நடந்த திடீர் பிரச்சனை.. ஒருவரை ஒருவர் இழுத்துப் பிடித்து நடந்த கலாட்டா.. செஃப் வைத்த செக்
சென்னை: குக் வித் கோமாளி சீசன்4 நிகழ்ச்சியின் அடுத்த வாரத்திற்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அடுத்த வாரத்தில் பாரம்பரியமான உணவு பொருட்கள் சமைக்கும் திருவிழா நடைபெற இருக்கிறது.
அதில் புகழ் மற்ற போட்டியாளர்களோடு ஏற்பட்ட கலாட்டா தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் அதிகமான ரசிகர்கள் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் ஒளிபரப்பராகி வருகிறது. இதில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நான்கு சீசன்களாக தொடர்ந்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒவ்வொரு முறையும் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து அரட்டை அடிப்பதை பார்த்து பலர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுவரைக்கும் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் பார்த்து ரசித்த நடிகர்கள் நிஜத்தில் இப்படிப்பட்டவர்களா? என்பது இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்வதாக பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நல்ல விறுவிறுப்போடு நகர்ந்து வரும் நிலையில் கடந்த வாரம் கலகலப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில் திடீரென்று ஷெரின் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து தற்போது அடுத்த வாரத்திற்கான எபிசோடு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது அடுத்த வாரம் கிராமத்து சமையல் எபிசோடு தான் வரப்போகிறது. அதற்காக போட்டியாளர்கள் அனைவரும் கிராமத்து உடையில் வந்திருக்கின்றனர். குக்குகள் மட்டுமல்லாமல் நடுவர்களும் கிராமத்து உடையில் வந்திருக்கும் நிலையில், அங்கே ஏற்பட்ட கலகலப்பான சேட்டைகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. அதில் மொத்தமாக அனைவரும் இருக்கும் இடத்தில் புகழ் போட்டோவிற்கு முன்னாடி நான்தான் போஸ் கொடுப்பேன் என்று அடம் பிடிக்க அவரை செஃப் வெங்கடேஷ் பட் அதட்டுவது போன்ற எபிசோடு வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications