மேடையில் ரஜினியை பார்த்து ராதிகா சொன்ன வார்த்தை..அரங்கமே அதிர்ச்சியில்..இப்படியும் நடக்குமா?
சென்னை: நிருபர்கள் சந்திப்பின்போது எந்தவித தயக்கமும் இன்றி ரஜினிகாந்தை வம்பிழுத்த ராதிகாவின் செயல், ராதிகாவின் குறும்புத்தனத்தை காட்டுவதோடு மட்டுமின்றி, அதை ரசித்து பாராட்டிய ரஜினிகாந்தின் பெருந்தன்மையையும் காட்டுவதாகவும் இருப்பதாக பலர் வியந்து வருகின்றனர்.
பெரிய திரை நாயகிகளால் சின்னத்திரையிலும் ஜொலிக்க முடியும் என்று நம்பிக்கையையும் தைரியத்தையும் தன்னுடைய 'சித்தி' சீரியல் மூலம் ஏற்படுத்தியவர் ராதிகா. இவரை பார்த்து தான் பல முன்னணி நாயகிகள் சின்னத்திரைகள் நுழைய ஆரம்பித்தனர்.
இவரது சித்தி சீரியலில் இவரது கதாபாத்திரத்தை பார்த்து தமிழ்நாடே இவரை 'சித்தி"என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்து வைத்திருந்தார்.
மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன் கதாநாயகி, அக்கா, அம்மா மற்றும் பல குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து இன்றும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.எம்.ஆர்.ராதா மகள் என்பதாலோ என்னவோ.. எதைப்பற்றி கேட்டாலும் தனது கருத்துக்களை தைரியமாக சொல்லிவிடுவார். சமீபத்தில் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வந்த பயில்வான் ரங்கநாதனை லெப்ட் ரைட் வாங்கிய சம்பவம் இவரது தைரியத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

தெலுங்கில் வெற்றி பெற்ற 'தர்மதுடு' படத்தை தமிழில் 'நல்லவனுக்கு நல்லவன்' என்ற பெயரில் விசு இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா நடித்திருப்பார். அந்த சமயத்தில் நிருபர்கள் சந்திப்பின்போது ஒரு நிருபர் குறும்பாக ராதிகாவை பார்த்து என்ன மேடம் வளர்ந்து வரும் கதாநாயகியான தாங்கள் கார்த்திக் மாமியாராக நடிக்கிறீங்கலாமே..!!என்று நக்கலாக கேட்க,
அதற்கு ராதிகா கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று ஆமாம்..ரஜினி சாரே மாமனாராக நடிக்கும் போது, நான் நடித்தால் என்ன?..என்று ஒரே போடாய் போட்டுள்ளார்.அந்த நேரத்தில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்திடம் பேசுவதற்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களே பயப்படும் பொழுது ராதிகாவின் இந்த பதிலை எதிர்பார்க்காத மொத்த படக் குழுவும் அதிர்ச்சியாகி விட்டதாம்.
ஆனால் ரஜினிகாந்த் ராதிகாவின் இந்த பதிலை ரசித்ததோடு மட்டுமின்றி முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியுள்ளார்.என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன் மனதில் தோன்றிய பதிலை சட்டென்று போட்டு உடைத்த ராதிகாவையும், அந்த பதிலை ரசித்ததோடு மட்டுமின்றி புன்னகையுடன் அதை பாராட்டிய ரஜினிகாந்த் செயலையும் நினைத்து பலர் அவர்களை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications