கதறி அழுத பாடகி அனுராதா.. ஹேர் ஸ்டைலை வைத்து வந்த ட்ரோல்.. பின்னணி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் மறைவு செய்தி தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவருடன் நெருக்கமாக பழகியவர்கள், அவருடைய இசையில் பாடிய பாடகர்கள் என பலரும் தேவாவுடனான தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாடகி அனுராதா ஸ்ரீராமுக்கும் தேவாவுக்கும் இடையே இருந்த பாசம் இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தேவா மறைந்த செய்தியை கேட்டதும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அனுராதா ஸ்ரீராம் ஓடோடி வந்தார். அங்கு அவர் கதறி அழுத காட்சிகளும் வெளியாகின. தேவாவை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதைக் காட்டும் வகையில் அந்த வீடியோ இருந்தது. ஆனால், அந்த சூழலில் அனுராதாவின் ஹேர் ஸ்டைலை பார்த்து சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர். இப்போது அந்த தோற்றத்துக்கு பின்னால் இருந்த காரணம் குறித்த தகவல் பகிரப்பட்டு வருவதால், உண்மை தெரியாமல் ஒருவரை விமர்சிப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Anuradha

தேவா காட்ஃபாதர்

அனுராதா ஸ்ரீராமை பொறுத்தவரை தேவா வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல. அவருடைய திரையிசை பயணத்தில் மறக்க முடியாத உதவியாக இருந்தவர். தேவாவின் இசையில் பல்வேறு விதமான பாடல்களை பாடும் வாய்ப்பு அனுராதாவுக்கு கிடைத்தது. அதனால்தான் தேவா மீது அவருக்கு எப்போதுமே தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருந்து வந்திருக்கிறது.

தேவாவின் மறைவின்போது அனுராதா மருத்துவமனைக்கு வந்த காட்சிகளை பார்த்தவர்கள், அவர் கதறி அழுததைக் கவனித்திருப்பார்கள். ஆனால், அதே நேரத்தில் அவருடைய தலைமுடி அலங்காரத்தை வைத்து சிலர் கேலி செய்தது வேதனையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Anuradha

பின்னணியில் இருந்த காரணம்

அனுராதா ஸ்ரீராம் சமீபத்தில் கென்யா சென்றிருந்தபோது, அங்கு பாரம்பரிய முறையிலான ஹேர் ஸ்டைல் ஒன்றை செய்து இருக்கிறார் அது குறித்து சோசியல் மீடியாவில் கூட வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த ஹேர் ஸ்டைலை கலைத்து சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதற்கே 6 முதல் 7 மணி நேரம் வரை ஆகுமாம். அவர் கென்யாவிலிருந்து திரும்பிய நேரத்தில்தான் தேவா மறைந்த செய்தி தெரியவந்ததாகவும், செய்தியைக் கேட்டதும் தனது நெருக்கமானவரான தேவாவை பார்க்க மருத்துவமனைக்கு அவசரமாக வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தலைமுடி அலங்காரத்தை மாற்றுவதற்கான அவகாசம் அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம்.

இந்த பின்னணி தெரியாமல், அனுராதா அந்த ஹேர் ஸ்டைலில் மருத்துவமனைக்கு வந்ததை வைத்து சிலர் கிண்டல் செய்வதற்கு பதில் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு நெருக்கமானவர் மறைந்திருக்கும் நேரத்தில், அவருடைய தோற்றத்தை மட்டும் வைத்து விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தேவா கொடுத்த பாடல்கள்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா முன்னிலையில் கூட, தன்னுடைய இசை பயணத்தில் அவர் செய்த உதவிகளையும் வழங்கிய வாய்ப்புகளையும் அனுராதா நன்றியுடன் பேசி இருந்தார். தேவாவைத் தனது காட்ஃபாதர் என்று குறிப்பிடும் அளவுக்கு அவர்களுக்குள் அன்பும் பிணைப்பும் இருந்திருக்கிறது.

ஒரு கலைஞரின் வாழ்க்கையில் வாய்ப்பளித்தவர்களுடனான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை அனுராதாவின் இந்த உணர்வுகள் காட்டுகின்றன. தேவாவின் மறைவு அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, அதில் தெரியும் காட்சியை மட்டும் வைத்து ஒருவரைப் பற்றி முடிவு செய்துவிடுவது எளிது. ஆனால், அந்தக் காட்சிக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பல நேரங்களில் நமக்குத் தெரியாது. அனுராதா ஸ்ரீராம் விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+