பாட்டு பாடி அசத்திய ராஜு... பின்னணியில் கலாய்க்கும் பிரியங்கா...கலக்கும் பிக் பாஸ்
சென்னை: தற்போது ராஜூ செய்த செயலைப் பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர்.
இதுவரைக்கும் இவரை எப்படியோ என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமை என கூறி வருகின்றனர்.
நம்ம தலைவர் வேறு ரகம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

சின்னத்திரை பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதற்கு காரணமாக ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகின்றனர். அதில் ராஜுவும் ஒருவர். இவர் இதற்கு முன்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான்.

உதவி இயக்குனர்
பல நடிகர்கள் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக கலக்கி கொண்டிருக்கும் போது, இவர் வெள்ளித்திரையில் பெரிய இயக்குனரிடம் பணிபுரிந்து விட்டு தனக்கான அங்கீகாரத்தை சின்னத்திரையில் தேடி இருக்கிறார். இவருக்குள் பல திறமைகள் இருந்தாலும் அதில் ஒவ்வொன்றாக இப்போதுதான் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் மூலமாக சீரியல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

ரசிகர்களின் நம்பிக்கை
கதாநாயகனுக்கு இணையாக காமெடி நடிகராக இருந்தாலும் இந்த சீரியலில் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் அளவை பார்த்துதான் தற்போது கூட இவர் இந்த சீரியலில் இல்லாவிட்டாலும் இவருக்கு பதிலாக வேறு யாரையும் சீரியல் குழுவினர் அறிமுகப்படுத்தவில்லை. ஆனாலும் சீரியலின் கதை இப்படி இவர் துபாய்க்குச் சென்று விட்டதாக கதையை லாவகமாக மாற்றிவிட்டனர். இதனை ரசிகர்கள் எதிர்பார்க்காவிட்டாலும் சரி எப்படியும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இவர் சீரியலில் வந்துவிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அசத்தலான பாட்டு
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் புது பிரச்சனையாக முளைத்து கொண்டிருந்தாலும் அதில் எதிலும் அதிகமாக தலையிடாமல் இருந்து வரும் ராஜு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய இடங்களில் ஆணித்தரமாக தெரிவித்து விடுகிறார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இவர் பாட்டு பாடி அசத்தி இருக்கும் அன்சீன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications