சூரியை உடைத்த அந்த வார்த்தைகள்.. மண்டாடி விழாவில் கதறி அழுத காரணம்.. குடும்பத்தின் முன்பு இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகராக சினிமாவுக்குள் வந்து இன்று கதாநாயகனாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் நடிகர் சூரியின் பயணத்தில் மண்டாடி முக்கியமான படமாக மாறி இருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Actor Soori Emotional

கதறி அழுத சூரி

இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் பா விஜய் சூரியின் சினிமா பயணம் மற்றும் அவர் கடந்து வந்த போராட்டங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒரு எமோஷனலான கவிதை ஒன்றை வாசித்தார். ஒரு காலத்தில் கயிற்றில் தொங்கி பெயிண்ட் அடித்தவன்... இன்று உன்னை இந்த சினிமா புகழின் உச்சத்தில் வைத்திருக்கிறது. நீ மட்டும் வெற்றி பெறாமல் உன்னை சார்ந்த திரைத்துறையையும் வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறாய்.. என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த வார்த்தைகளை கேட்டு சூரி கண்கலங்கி அழுதுவிட்டார். கையெடுத்து கும்பிட்டு நன்றியையும் சொல்லி இருந்தார். இந்த காட்சிகள் வைரல் ஆகிறது.

நடிகர் சூரியின் ஆரம்ப கலம்

சூரியின் ஆரம்பகால பயணம் அவ்வளவு எளிதானது கிடையாது. பல படங்களில் சின்ன சின்ன இடங்களில் தலைகாட்டியவர். பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் கவனம் பெற்றார். அதற்கு பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து காமெடி கேரக்டர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை கூட்டத்தை உருவாக்கினார். ஆனால் சூரியின் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது வெற்றிமாறனின் விடுதலை. அதில் காமெடி நடிகர் என்ற இமேஜை முற்றிலும் ஒதுக்கிவிட்டு கதையின் நாயகனாக சூரியை பார்த்த ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு நடிகராக என்று ஆச்சரியப்பட்டனர்.

Actor Soori Emotional

மாஸ் கொடுத்த படங்கள்

அதற்கு பிறகு தொடர்ச்சியாக கருடன், கொட்டு காளி, மாமன் என ஹீரோவாகவே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மண்றாடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா விஜய் சூரியின் கடந்த காலத்தை நினைவுபடுத்தும் விதமாக பேசியதும் அவரால் பழசை மறக்க முடியாமல் அழுதுவிட்டார்.

Actor Soori Emotional

பெற்றோர் கண் முன்னே

இந்த விழாவில் சூரியின் அம்மா, மனைவி, சகோதரர்கள் என மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முன்பு சூரி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கறது. ஆரம்பத்தில் சூரியின் அம்மா மேடையில் பேசும்போது கூட சூரி சினிமாவுக்கு போன ஆரம்ப காலகட்டத்தில் சாப்பாடுக்கு கூட வழி இல்லாமல் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இருந்த நாட்களை பற்றி உருக்கமாக பேசினார். அப்போது கூட சூரி சிரித்தபடி தான் அம்மாவையும் கிண்டல் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடைசியாக பாடல் ஆசிரியர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அவர் அழுது விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+