Thenmozhi BA Serial: ரொம்ப நாளைக்குப் பிறகு அன்னிக்கு நல்லாருந்துச்சு...!
சென்னை: பரமு... அன்னிக்கு எண்ணெய் வழுக்கிவிட்டு வந்து விழுந்தியே.. நான் தாங்கிப் புடிச்சேனே...என்று புருஷன் சொல்ல.. ஆமாம். அதுக்கென்ன இப்போ என்று கேட்கிறார் தேனுவின் மாமியார்.
ரொம்ப நாளைக்கு பிறகு அன்னிக்கு நல்லாருந்துச்சு... இன்னிக்கும் அப்படி செய்யலாமா என்று கேட்க.. சீய்.. உங்களுக்கு அசிங்கமா இல்லைன்னு கேட்கறாங்க அவங்க.
நல்லவேளை யாரும் பார்க்கலைன்னு சொல்லி மனசைத் தேத்திக்கறார் தேனுவின் மாமனார்.விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் மேற்கண்ட காட்சி இன்னிக்கு இரவு ஒளிபரப்பாக இருக்குது.

போட்டு வைத்த காதல் திட்டம்
அப்பத்தா போட்டு வைத்த காதல் திட்டத்தின் படி, அருள் வரும்போது சோப்பைத் தூக்கி போட்டுட்டாங்க. அவன் சறுக்கி வீழ்வான்.. அப்போது தேன்மொழி வந்து அவனைத் தாங்கிப் பிடிப்பது போல கட்டிக்கிட்டு நிக்கணும். இதுதான் அப்பத்தா போட்டு வைத்த காதல் திட்டம். இந்த திட்டத்துக்கு தேனு அப்பத்தாவை கவனிக்க வேண்டிய வகையில் குலாப் ஜாமூன் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டா.

அப்பத்தா சோப்பைப் போட
அப்பத்தா சொன்னபடியே அருள் வரும்போது சோப்பை போட்டுட்டாங்களா... சொன்ன மாதிரி அருளும் அதுல காலை வச்சு சறுக்கிக் கொண்ட வரும்போது தேனு வந்து அவனைப் பிடிச்சுக்கறா. தேனுவின் முகம் அருளு கன்னத்தில் முத்தம் வைப்பது போல போயிட்டு வந்து அவனை நேருக்கு நேர் பார்த்து நிக்குது. அவனும் மெய் மறந்துதான் தேனுவை பார்த்துட்டு நிக்கறான். வயசு அப்படியாச்சே.. யாரை குத்தம் சொல்ல முடியும்...

எவ அவ?
இது என்ன தெரியாம நடந்ததா... தேனுவுக்கு தெரிஞ்ச டிராமாத்தானே.. அவ என்ஜாய் பண்ணிக்கிட்டு நிக்கறா. அப்பத்தா ஒதுங்கி நின்னு பார்த்து ரசிக்க.. மதர் இன் லா வந்துட்டாங்க. டேய் என்று ஒரு அதட்டல் போட.. எவ அவ...என்று மயக்கத்தில் இருந்த தேனு கேட்கிறாள். மறுபடியும் ஒரு அதட்டல்.. இருவரும் சட்டென்று விலகிக் கொள்கிறார்கள்... தேனு விட்டு இருந்தா அருளை புடிச்சுக்கிட்டே நின்னு இருப்பா. அருள் அவளை விலக்கி விட்டுட்டான்.வீடே அங்கே கூடிப் போச்சு.

சத்தியம் சர்க்கரை பொங்கல்
இல்லைம்மா சோப்பு வழுக்கி சறுக்கிட்டேன்னு அருள் சொல்றான். யாரு இங்கன கொண்டு வந்து சோப்பை போட்டதுன்னு கேட்கறாங்க மதர் இன் லா. சத்தியமா நான் இல்லைடின்னு சொல்றாங்க அப்பத்தா.ஒரு வயசுக்கு மேல சத்தியம் சர்க்கரை பொங்கல்தான். அதெல்லாம் கண்டுக்க கூடாது. எல்லாரும் உள்ளே போக.. மதர் இந்த லா மட்டும் இருக்காங்க. அப்போதுதான் ஃபாதர் இன் லா வந்து, பரமு அன்னிக்கு எண்ணெய் வழுக்கி விழுந்தியே.. நான்தானே தாங்கிப் புடிச்சேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அன்னிக்கு நல்லா இருந்துச்சு. இப்போதும் ட்ரை பண்ணலாமான்னு கேட்கறார்.
இதுதான் நடந்துச்சுங்க.. வேற ஒன்னும் அன்னிக்கு நடக்கலை!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications