என்ன நடக்கப் போகுதோ?.. எதிர்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கும் தென்றல் வந்து என்னைத் தொடும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடடா தலைக்கு தில்ல பாத்தியா...என்று சொல்வது போல யார் என்ன சொன்னாலும் நாங்க அந்த நேரத்தில் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலை இறக்கப் போகிறோம் என்று விஜய் டிவி கெத்து காட்டிவிட்டது.

ஏற்கனவே இந்த சீரியலின் கதையை பல திரைப்படங்களில் பார்த்து இருந்தாலும், இப்போ சீரியலிலும் வந்து ஒரு புரட்சி நடக்கப் போகிறதா இல்லையா என்பதை பார்ப்பதற்காக ரசிகர்களும் ஆர்வம் கூட்டி வருகின்றனர்.

அப்போ வரும் ஆகஸ்ட் 16 இல் இருந்து தெரிய போகுது தென்றல் வந்து தொடுமா இல்லை புயல் வந்து வீசுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விமர்சனங்களே விளம்பரங்கள் தான்

விமர்சனங்களே விளம்பரங்கள் தான்

எது எப்படியோ ஏதோ ஒரு வழியில் எங்களது நிகழ்ச்சிக்கு விளம்பரம் கிடைத்தால் சரிதான் என்பதுபோல். விஜய் டிவி தனது அடுத்த புதிய தொடரான தென்றல் வந்து என்னை தொடும் தொடரை வரும் திங்கள் முதல் ஒளிபரப்ப தயாராகிவிட்டது. தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியலின் ப்ரமோ வெளிவந்த போது பல்வேறு வழிகளில் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவது என்னவோ புதியதல்ல.

என்னவாக இருக்கும்

என்னவாக இருக்கும்

ஆனால் காவல் துறையிடமிருந்து நேரடியாக விமர்சனங்களை முதன்முறையாக பெற்றது என்னவோ "தென்றல் வந்து என்னைத் தொடும்"சீரியலின் பிரோமோவாக கூட இருக்கலாம். வழக்கம்போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் போன்றே இதிலும் ஒரு நட்சத்திரக் கூட்டம் நடித்திருந்தாலும், வெற்றி மற்றும் அபிநயா கதாபாத்திரங்களை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொண்டாலும், இவர்களுக்குள் காதல் மலருமா இல்லை கருத்துவேறுபாடு வருமா பெரும் எதிர்பார்ப்போடு சீரியலின் பிரோமோ இருக்கிறது.

ஹீரோயினின் அழகும் அள்ளுதே

ஹீரோயினின் அழகும் அள்ளுதே

இதில் வெற்றி கதாபாத்திரத்தில் ஆதித்தியா டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமாகி தற்போது விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் கதாநாயகனாக நடித்துவரும் வினோத் பாபு நடித்துள்ளார். அபிநயா கதாபாத்திரத்தில் பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தாலும் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் கதாநாயகியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்த பவித்ரா ஜனனி நடித்துள்ளார்.

இது மூடநம்பிக்கையை வளர்க்காதா?

இது மூடநம்பிக்கையை வளர்க்காதா?

பொதுவாக அதிகமாக சென்டிமென்ட் பார்க்கும் நம் தமிழ்நாட்டு மக்களிடையே இந்த சீரியலின் ப்ரோமோ ஏற்படுத்திய தாலி செண்டிமெண்ட் குறித்த சர்ச்சை பார்த்து அனைத்து தரப்பினரும் சற்று ஜெர்க் ஆகி தான் போயினர். இது நச்சு தன்மையை விதைப்பது போன்ற சீரியல் என்று சமூக ஆர்வலர்களிடமும், பெண்ணிய அடிமைத்தனத்தை காட்டுகிறது என்று பெண்ணியவாதிகள் இடமும், மாறிமாறி விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் இதற்கெல்லாம் ஒருபடி மேலே காவல்துறை துணை ஆணையர் இந்த புரோமோ குறித்து டுவிட்டரில் எச்சரிக்கை செய்து இருந்ததுதான் மிகப் பெரிய விளம்பரமாக சமூக வலை தளங்கள் மட்டுமின்றி செய்தித்தாள்களிலும் இடம்பெற்றது.

பொறுத்திருந்து பார்ப்போம்

பொறுத்திருந்து பார்ப்போம்

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத விஜய் டிவி நிர்வாகம் நாங்க பார்க்காத கேசா என்பது போல் இந்த சீரியல் ஒளிபரப்பாக்க தயாராகிவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது . வழக்கம்போல் அடங்காத ஆண்டிபட்டி மாப்பிள்ளையை அடக்கமான அமெரிக்க பெண் திருத்துவது போன்ற வெளியான இந்த ப்ரமோவே சற்று பிரபலமான நிலையில் இதன் முழு ஒளிபரப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் இதை போன்று பப்ளிக் இடம் முதலில் நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் அதன் வெற்றியை தவிர்க்கமுடியவில்ல. ஒருவேளை தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலும் அதுபோல் அமையலாமோ என்னவோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+