தேங்காய் சீனிவாசன் பேத்திக்கு ஒரே பூரிப்பு.. பிக் பாஸ் ஸ்ருதிகா கணவரை எப்படி புகழ்கிறார் பாருங்க
சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதிகா அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை சமீபத்தில் ஷேர் செய்திருந்தார்.. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்,. காரணம், மருத்துவமனையில் ஸ்ருதிகா அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆபரேஷனும் அவருக்கு நடந்துள்ளது.. இந்நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவரை அவரது கணவர் அக்கறையுடனும் கனிவுடனும் கவனித்து கொண்டு வருகிறார்.. இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியிருக்கிறது..
சூர்யா ஜோடியாக ஸ்ரீ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதிகா.. இவர் மறைந்த மூத்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.. தன்னுடைய பள்ளி பருவத்திலேயே இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டார்.

பிறகு தித்திக்குதே, ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதிலும் இவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரை பக்கம் வந்தார்.. அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார்.. பிறகு ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துக்கொண்டு ஹிந்தி, தமிழ் என இரு தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சாலும், வெளிப்படையான அணுகுமுறையாலும் பெற்றார்.. இதனால் தேசிய அளவில் ஸ்ருதிகா பிரபலமானார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காணொளியை ஷேர் செய்திருந்தார்.. அதைபார்த்ததுமே ஸ்ருதிகாவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு தன்னை குழந்தை போல் கவனித்துக்கொள்ளும் கணவனின் அன்பை காணொளியாக தற்போது ரசிகர்களுடன் பதிர்ந்துள்ளார்.
கால் பாதங்கள்
அந்த வீடியோவில், ஸ்ருதிகாவை, அவரது கணவர் அர்ஜுன் கைத்தாங்கலாக அழைத்து வந்து உட்கார வைக்கிறார்.. பிறகு ஸ்ருதிகாவுக்கு கால்களை அமுக்கி விடுகிறார். சாப்பாடு ஊட்டி விடுகிறார். குளிப்பாட்டி, தலை முடியை உலர்த்துகிறார். ஸ்ருதிகா தூங்கும்போது அவருக்கு கால் விரல்களையும் பாதங்களையும் மசாஜ் செய்து விடுகிறார். ஸ்ருதிகா ஷோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தால் அதே ஷோபாவில் அவரது கணவர் படுத்து தூங்குகிறார்.
"ஆபரேஷனுக்கு பிறகு என்னைப் பார்த்துக் கொள்வதில் எனது கணவர் மிகவும் அக்கறையாக நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த மனுஷன் ரொம்பவும் சோர்ந்து விட்டார். இப்போது நான் தான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். கப்பிள்ஸ் கோல்ஸ்" என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிகா.. அவரது நீண்ட உருக்கமான பதிவு இதுதான்
புதிய அத்தியாயம்
" ஒரு வருடம். இரண்டு உலகங்கள். நன்றியுணர்வு நிறைந்த ஒரு இதயம். சரியாக ஒரு வருடம் முன்பு, இதே நாளில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் - என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றை வாழ்ந்தேன்.
நான் நினைத்துப் பார்க்காத விதத்தில் என் வலிமை, பொறுமை மற்றும் உணர்ச்சிகளை சோதித்த ஒரு பயணம் பிக் பாஸ் பயணம். எமோஷனல் கேப்சன்: இன்று, ஒரு வருடம் கழித்து, நான் முற்றிலும் மாறுபட்ட உலகில் இருக்கிறேன். கேமராக்கள் மற்றும் ஸ்பாட் லைட்கள் என்னைச் சுற்றி இல்லை.
ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குணப்படுத்தும் அமைதியான வலிமையால் சூழப்பட்டுள்ளது. ஒரு பெரிய அறுவை சிகிச்சையாக தொடங்கிய இது, மற்றொரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. இந்த அனுபவம் கருணை மற்றும் நம்பிக்கையின் வலிமையை எனக்கு நினைவு படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை நிபுணர்
இந்த ரீலை, பிரியா லக்ஷமணன் மருத்துவருக்கு அர்ப்பணிக்கிறேன். அனுபவ கைகளாலும், இரக்கத்தால் நிறைந்த இதயத்தாலும் குணப்படுத்தும் நம்பமுடியாத திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்; மிகவும் எளிமையானவர். அந்த எளிமைக்குப் பின்னால், பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளைச் செய்த ஒரு பெண் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது;
நம்பமுடியாத வெற்றி விகிதத்துடன் பெண்கள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைகளையும் அவர் கையாண்டார். எனக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை அவர் அதை மிகவும் எளிதாகச் செய்தார், கடவுளின் சொந்தக் கைகள் அவள் மூலம் செயல்படுவது போல் உணர்ந்தார்.
கடவுளுக்கு நன்றி
ஆனால் என்னை உண்மையிலேயே தொட்டது என்னவென்றால், நான் மட்டும் பராமரிக்கப்படவில்லை. எனது முழு குடும்பமும், என்னைப் பார்க்க வந்த அனைவரும், ஒரே அரவணைப்புடன் கவனிக்கப்பட்டனர். எனது சாப்பாடு முதல் அவர்களின் உணவு வரை, அனைத்தும் அன்புடன் கவனித்துக் கொள்ளப்பட்டன. இதனால் ஒருபோதும் ஒரு மருத்துவமனைபோலவே நான் உணரவில்லை, எனக்கு வீடு என்ற உணர்வையே கொடுத்தது.
இன்று, அதே கடவுள் எனக்கு மீண்டு வர உதவுகிறார். விரைவில் குணமடைய நம்பிக்கையுடன், வேலைக்குத் திரும்புவதற்கு மட்டுமல்ல, இரட்டிப்பாக கடினமாக உழைத்து ஆழ்ந்த நன்றியுணர்வுடன் வாழவும். எனக்காக மட்டுமல்ல, என்னுடைய பயணத்திலிருந்து பலத்தைப் பெறும் என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ருதிகாவின் இந்த பதிவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications
