Thenmozhi BA Serial: எங்க சித்தி அப்பாவுக்கு ரொம்ப நாளா ரூட் போடுது சார்..! உனக்கு தேனு?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல், தேன்மொழி வெரி இண்ட்ரஸ்டிங் கேர்ள்னு சொல்லலாம். அப்படி ஒரு நகைச்சுவை உணர்வு, கேலி, கிண்டல், நையாண்டி என்று அசத்தி விடுகிறார், இந்த கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்கும் ஜாக்குலின்.
நல்ல மாப்பிள்ளை கிடைச்சு கல்யாணம் ஆகி செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கும் சராசரி பெண்ணான இவளுக்கு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு.
அப்போதும், தனக்கு அடுத்த வருஷம் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணு தகப்பான்னு கேட்கும் கேரக்டர். ரொம்ப ரசிக்கும்படி நடிச்சு இருக்கார் ஜாக்குலின்.

கல்லுப்பட்டி ஹீரோ
கல்லுப்பட்டி ஹீரோன்னு தேனு ஆசையா பெயர் வச்சு இருக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தேவரய்யா மகன் அருள்வேல்தான் தேன்மொழிக்கு கல்லுப்பட்டி ஹீரோ.அவன் செய்யும் வேலைகள்,செயல்கள் சினிமா ஹீரோ மாதிரி இருப்பதால் தேன்மொழி வியந்து இந்த பெயரை ரொம்ப இன்னொசென்டா வச்சு இருக்கா.

விஏஓ சார்
கிராமத்தின் விஏஓ சார் வீட்டில் அவரின் குழந்தைக்கு ரொம்பவும் நெருக்கமாகி விடுகிறாள் தேன்மொழி.அந்த பெண் குழந்தை தேனு வீட்டில் தீபாவளி இவ்வளவு கிராண்டா கொண்டாடுவாங்களோ என்னவோ..நம்ம அவங்க வீட்டுக்கு போயி கொண்டாடலாமான்னு கேட்குது.

கலக்கல் தீபாவளி
விஏஓ சாரும் தனது மகளோடு தேன்மொழி வீட்டுக்கு தீபாவளி கொண்டாட வருகிறார். அங்கு இலை போட்டு சாப்பாடு பரிமாற , தேனுவின் சித்தி தேனுவின் அப்பாவுக்கு கூடுதலாக இன்னொரு சுவீட் வைக்க, அதை வெடுக்கென்று எடுக்கிறாள் தேன்மொழி.

அப்பாவுக்கு ரூட்
சித்தி அப்பாவுக்கு ஒரு சுவீட்தான்.. அதுக்கு மேல அவர் சாப்பிட மாட்டார்னு சொல்லிட்டு.. சார், சித்தி அப்பாவுக்கு ரொம்ப நாளா ரூட் போடுதுன்னு ரொம்ப அசால்ட்டா கேலி செய்யறா தேன்மொழி. அடிக்கடி சித்தியிடம் இருந்து அப்பாவை காப்பாற்றுவதும் தேனுவின் வேலை. சித்தி நீ கெளம்புன்னு தேனு சொல்ல,சார் தேனு சும்மா கிண்டல் பண்ணுவா சார்னு அப்பா சமாளிக்கிறார்.
அது சரி.. தேனுவும் விஏஓவும் சேர்ந்து பட்டாசு வெடிப்பதை அப்பா ரசிக்கிறார். தேனுவுக்கு ரூட் போடறது விஏஓவா, இல்லை ஹீரோ அருள்வேலா.. கூடவே சுற்றி தேனைப் பார்த்து சைட் அடிக்கும் நண்பனா?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications