Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கா கேட்காமலே... தங்கச்சி கேட்டும் வேலைக்கு ஆகல...!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமி அப்பாவுக்கு புடிக்காத பொண்ணு. அதிர்ஷ்டம் கெட்டவ.. வெளங்காதவ.. இப்படித்தான் அப்பாவோட கணிப்பு.

ஆனா, இவ்வளவு வெறுக்கும் அப்பாவை அவ்வளவு நேசிக்கும் அருமையான குணவதியான பொண்ணு பவுர்ணமி. சித்திக்கு பிறந்த பவானியும் ரொம்ப அருமையான பொண்ணு, மொத்தத்துல குடும்பமே நல்ல குடும்பம்தான்..

சக்ரவர்த்தி மட்டும் தன் குணத்தை மாத்திகிட்டா இந்த சீரியல் குடும்பம் உதாரண குடும்பமா இருக்கும். அதாவது இந்த குடும்பத்துல கெடுக்கறவங்க.. சூழ்ச்சி பண்றவங்க இல்லை.

லவ்

லவ்

பவுர்ணமிக்கு யார் மேலயோ லவ் வந்திருச்சுன்னு பாட்டி குதூகலமா இருக்க, அப்பா சக்ரவர்த்தி, பவுர்ணமி யார் கூடவோ வண்டியில சுத்தறான்னு கத்தறார்.மார்க்கெட்டுல இறக்கிவிடு ராம்கி தன்னிடம் முன்பு போல போன் நம்பர் கேட்பான்னு எதிர்பார்த்துக்கிட்டு நிக்கறா பவுர்ணமி. அவன் கேட்காமலே போறான்

ராம்கி

ராம்கி

கொஞ்ச தூரம் அவன் போனவுடனே ராம்கின்னு கூப்பிடறா பவுர்ணமி. அவன் திரும்பி வர.. அன்னிக்கு பார்க்கும்போது போன் நம்பர் கேட்ட.. இன்னிக்கு கேட்காமலே போறேன்னு சொல்றா.. ஐயோ மறந்துட்டேன் பவுர்ணமி.. அன்னிக்கு கேட்டும் கிடைக்கல.. இன்னிக்கு கேட்காமலே கிடைக்குதுன்னு ரொம்ப சந்தோஷமா வாங்கிக்கறான்.

லிஃப்ட்

லிஃப்ட்

பவுர்ணமியும் ராம்கியும் கிளாஸ் மேட். அப்பவே ராம்கிக்கு பவுர்ணமியை ரொம்ப புடிக்கும், இப்போ பார்த்த உடனே அவமேல லவ் வந்துருது. இந்த சமயத்துலதான், வண்டியை ஒரு நாள் ஸ்டார்ட் செய்து கொடுத்த ராம்கி மேல பவுர்ணமி தங்கச்சி பவானிக்கு லவ் வந்துருது. வேணும்னே பவானி வந்து ராம்கியிடம் லிஃப்ட் கேட்கறா.

இந்த பக்கம்

இந்த பக்கம்

ஓ.. நீங்களா.. என்னங்க இந்த பக்கம்னு கேட்கறான் ராம்கி. இல்லை என் ஃபிரண்ட் வீட்டுக்கு வந்தேன்.. வண்டி ரிப்பேர் ஆயிருச்சுன்னு அவ சொல்ல, என்னை என்ன மெக்கானிக்னு நினைச்சீங்களா, எப்போ பார்த்தாலும் வண்டி ரிப்பேர்னு சொல்றீங்கன்னு கேட்கறான். இல்லைங்க.. இப்போ என்னை அந்த மெயின் ரோடு வரைக்கும் போயி டிராப் பண்ணிடுங்கன்னு கேட்கறா பவானி.

பவுர்ணமி

பவுர்ணமி

வண்டியில பவுர்ணமி உட்கார்ந்திருக்கற மாதிரியே ராம்கிக்கு தெரியுது. என்னடா இவன் ஒரு பொண்ணு வழிய வந்து லிஃப்ட் கேட்கறா.. இப்படி யோசிக்கறானேன்னு பவானி பார்த்துகிட்டு நிக்கறா. அந்த வழியாக ஒரு வண்டி வர, பிரதர்.. இவங்களை கொஞ்சம் மெயின் ரோடு வரைக்கும் கொண்டு போயி விடுங்களேன்னு சொல்லிட்டு கிளம்பறான். அவன் வண்டியை நிறுத்தி இவளை கூப்பிட நீ போன்னு வெறுப்பா கையை காமிக்கறா பவானி.

அக்காவும் தங்கச்சியும் ஒரே பையன் மேல ஆசைப் படறாங்க.. இனிமே இந்த குடும்பம் எப்படி இருக்குமோ...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+