பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வான 19 போட்டியாளர்கள் இவர்கள்தான்! காமன்மேன் முதல் செலிபிரட்டீஸ் வரை முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுவரைக்கும் நடக்காத பல அதிரடியான சம்பவங்கள் தற்போதைய 10வது சீசனில் நடந்திருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்களை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அது போக வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

லட்சுமி பிரியா

முதல் போட்டியாளராக உள்ளே சென்றவர் லட்சுமி பிரியா அறிமுகமே தேவை இல்லை. விஜய் டிவியில் மகாநதி சீரியல் முலம் பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மகாநதி சீரியலில் காவிரியாக கிடைத்தது. அதனாலயே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்றதும் இதில் லட்சுமி பிரியா வரவேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்போது அப்படியே நடந்து விட்டது.

ஷாதிகா

லட்சுமி பிரியாவை தொடர்ந்து அவருடன் செலக்ட் ஆனவர்தான் ஷாதிகா. இவர் மகாநதி சீரியலில் லட்சுமி பிரியாவுக்கு வில்லியாக நடித்திருந்தார். அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

சாந்தினி தமிழரசன்

சாந்தினி தமிழரசன் என்று சோசியல் மீடியாவில் அதிகமான பிரபலம் இருக்கிறது. அவர் அறிமுகமானது சித்து பிளஸ் 2 என்ற படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக நடித்துதான். ஆனால் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல டான்ஸ் மாஸ்டர் நந்தாவின் மனைவி தான். ஜீ தமிழில் ஒரு சில சீரியல் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலும் தொடந்து நடித்து வருகிறார்.

பிளாக் பாண்டி

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்த பிளாக் பாண்டி அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையிலும் பிரபலமானார். ஆனால் சமீப காலமாக அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைக்காத நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

வினோத் பாபு

வினோத் பாபு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தான் அவருக்கு சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம் கிடைத்த வெற்றியை வைத்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் ஹுரோவாக நடித்தார். சமீபத்தில் அவர் பெரிதாக சீரியல்களில் நடிக்கவில்லை இந்த நிலையில் கடந்த சீசனிலயே அவர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் இருக்கிறார்.

குமரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து பிரபலம் அடைந்த குமரன் இதுவரைக்கும் சிரிக்கவே தெரியாத ஒரு அமைதியான கேரக்டரில் தான் படங்களிலும் சீரியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது அவர் நிகழ்ச்சியில் என்னுடைய நிஜ கேரக்டரை நீங்க பார்ப்பீங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு உள்ளே போயிருக்கிறார். அவருடைய விளையாட்டு எப்படி இருக்கிறது என்று போகப் போகத் தான் தெரியும்.

ராகவன் ரகுநாதன்

90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவரான ராகவன் நடிப்பு மியூசிக் டான்ஸ் என்று பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து இருந்தார். நஞ்சுபுரம் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதுபோல ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படத்தில் இவர் இசையமைத்த பாடலை விஜய் சேதுபதி மேடையில் பாராட்டி இருந்தார். அதேபோல இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய் சேதுபதிக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.

ப்ரித்திவிநாத்

ஜெர்மனி சேர்ந்த பிரபல காமெடி கிரியேட்டராக பிரபலமடைந்த பிரித்விநாத் சேலத்தை சேர்ந்தவர். அவர் இளம் தலைமுறை கன்டென்ட் ரைட்டர் ஆக உள்ளே வந்திருக்கிறார். ஏற்கனவே இந்த சீசனில் சிலர் காமன்மேன் போட்டியாளர்கள் கலந்திருக்கும் நிலையில் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் என்ன செய்யப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

முத்தழகி

ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான முத்தழகி பல சீரியல்கள், ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிகமான பாலோவர்ஸ் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பு.

நடிகை தான்யா

ரெசார்ட் வெப் சீரிஸ் மூலம் பிரபலம் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான்யா வந்திருக்கிறார். இவருடன் இந்த சீரிஸில் நடித்தவருடன் போட்டியில் ஜெயித்து இங்கே வந்திருக்கிறார். இதனால் இவருடைய விளையாட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அஷ்மிதா

மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பிரபலமான அஸ்மிதாவின் பர்சனல் வாழ்க்கையும் சில மாதங்களுக்கும் முன்பு பெரிதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. அதனாலேயே இவருக்கு அதிக பிரபலம் கிடைத்த நிலையில் இப்போது அவரும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு போல்டான போட்டியாளராக வந்திருக்கிறார்.

அவினாஷ்

அவினாஷ் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் சீரியலில் நடித்திருந்தாலும் சமீபத்தில் சின்னத்தம்பி உட்பட சீரியல்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு அவரும் அவருடைய சகோதரி அகஷிதாவும் செலக்ட் ஆகி இருந்தனர். கடைசியில் ஆடியன்ஸ் ஓட்டிங்கில் அக்ஷிதாவை விட இவர் அதிகமாக வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

முகேஷ்

முகேஷ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளுக்கு கேமராவுக்கு பின்னாடி அதிக வேலை பார்த்து இருக்கிறார். இதனால் இவரை பெரிதாக தெரியவில்லை என்றாலும் விஜய் சேதுபதி முன்பு ஜாலியான பேச்சு மற்றும் காமெடியான மிமிக்கிரியால் அவருக்கும் அதிக ஓட்டு கிடைத்திருக்கிறது. அதனாலே அவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

அன்சார்

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அன்சார் மிமிக்கிரி கலைஞரும் கூட. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர் பேசிக் கொண்டிருக்கும்போது ஆர்வக்கோளாரில் விஜய் சேதுபதி போல பேசி விஜய் சேதுபதியிடமே திட்டுவாங்கி இருந்தார்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

ஸ்வாமிதா

பெங்களூரு பொண்ணான இவருக்கு சோசியல் மீடியாவில் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்களாம். அதுபோல சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் இவர் இந்த வீட்டிற்குள் போயிருக்கும் நிலையில் அங்கு போய் என்ன பாடுபட போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜாவித்

காமன் மேன் போட்டியாளர்கள் போல இந்த முறை டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர்கள் சிலரை சஸ்பென்ஸாக அனுப்பி இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜாவித். இவர் இந்த நிகழ்ச்சிக்கு போனதுமே இவருக்கு அதிகமான பேன்ஸ் பேஜஸ் தொடங்கப்பட்டிருக்கிறது.

காமன் மேன் வெற்றியாளர்கள்

இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் காமன்மென் போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில் கடைசியில் 50 போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆடிஷன் வைத்து 8 போட்டியாளர்களை பிக் பாஸ் மேடையில் நிறுத்தி இருந்தனர். அவர்களில் 3 பேரை மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அதில் முனியம்மா, ஜேசன், சமா என்ற மூன்று போட்டியாளர்கள் தான் காமன்மேனாக பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார்கள். இந்த முறை செலிப்ரட்டிகளா? அல்லது காமன் மேனா? என்ற போட்டி இருப்பதால் வெற்றி யாருக்கு என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+