Sembaruthi Serial: வசனம் எழுதும்போது யோசிச்சு எழுத மாட்டியளா?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி அம்மா பேசும் வசனங்கள் ரொம்ப ஓவரா இருக்கு.
ஒன்ஸ் முடிவு பண்ணிட்டா இனி யார் சொன்னாலும் மாத்திக்கவே மாட்டேன் என்பது போல அவங்க கேரக்டராம். அதுக்கு சில இடங்களில் எக்குத் தப்பான வசனம் எலாம் பேச நேரிட்டது.
நான் ஆதி பிறந்த நாள் அன்னிக்கு கல்யாணம்னு முடிவு பண்ணிட்டேன். இனி யார் சொன்னாலும் மாத்திக்க மாட்டேன்னு சொல்றதை எப்படி சொல்றாங்க பாருங்க.

கடவுளே சொன்னாலும்
ஆதி பொறந்த நாள் அன்னிக்கு ஆதி மித்ரா, பார்வதி ரிஷிக்கு கல்யாணம்னு நான் முடிவு பண்ணிட்டேன். இனி அந்த கடவுளே வந்து சொன்னாலும் அந்த முடிவை நான் மாத்திக்க மாட்டேன்னு வசனம் பேசறாங்க. இயல்பில் அகிலாண்டேஸ்வரி நேர்மையானவங்க.. கடவுளை மதிக்கறவங்க. அந்த கேரக்டர் இப்படி ஒரு வசனம் பேசுமா?

நீலாம்பரி கேரக்டர்
இப்போதெல்லாம் இது போல பேசினால் அவங்க திமிர் பிடிச்சவங்கன்னு அர்த்தம். தவிர இப்படி பேச யாருக்கும் தைரியமும் வராது. சினிமாவில் நீலாம்பரி கேரக்டர் போல தேவைக்கு எதாவது ஒரு கேரக்டரை இப்படி படைப்பார்கள். அது அந்த சினிமாவுக்கு பொருத்தமாக இருக்கும். இந்த காலத்துக்கோ இல்லை சீரியலுக்கோ அது செல்லாது.இப்போது வசனத்தை மாத்தி எழுத யோசிங்க.

இறை பக்தி
இறை பக்தின்னா என்ன... நான் என்பதை மறக்க வேண்டும். ஆனால், அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு நான் என்கிற அகந்தை நிறைய இருக்கு. இறை பக்தியும் இருக்கு. கூடவே ஒரு குருஜியும் வச்சுக்கிட்டு ஆலோசனை கேட்கறாங்க. ஆனால், கடவுளே வந்து சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லைன்னு அகந்தை வசனம் பேசறாங்க.

கேரக்டருக்கு செட்டாகலை
அகந்தையா வசனம் பேசறது அகிலாண்டேஸ்வரி அம்மா கேரக்டருக்கு செட்டாகலை. அதே அதிகாரமா பேசினால் அகிலாண்டேஸ்வரியை பலரும் ரசிக்கறாங்க. இந்த தைரிய வசனம் மூலம்தான் அகிலாண்டேஸ்வரி கேரக்டர் சீரியல் ஆர்வலர்கள் மனதில் இடம் பிடிச்சுது. பிரியா ராமனும் இந்த நடிப்பில்தான் புகழடைந்தார். சோ.. அகிலாண்டேஸ்வரியை தைரிய லக்ஷ்மியா காண்பிங்க.. அகந்தை லக்ஷ்மியா காண்பிக்காதிய!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications