லாக்டவுன் நேரத்தில் திரு டிவி சமையல் நிகழ்ச்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிட் தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் சீரியல் ஷூட்டிங் இல்லை...போக்குவரத்து இல்லை.. எதுவும் இல்லை.

சன் டிவியில் கல்யாண வீடு சீரியலை தயாரித்து இயக்கிவரும் இயக்குநர் திருமுருகன், திரு டிவி என்று ஒரு யூடியூப் சானல் நடத்தி வருகிறார்.

இதில், கல்யாண வீடு ஆர்ட்டிஸ்ட் தங்கள் வீட்டில் இருந்தபடியே எதாவது ஒரு சமையலை செய்து காண்பித்து உள்ளனர். இந்த சமையல் நிகழ்ச்சியை திரு டிவி யூடியூப் சானலில் ஒளிபரப்பி வருகிறார் திருமுருகன்.

 கோபிஸ் கிட்சன்

கோபிஸ் கிட்சன்

இயக்குநர் திருமுருகனுக்கு கோபி கிருஷ்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டு, தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து இயக்கி நடித்தால் அந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆகும் என்கிற சென்டிமென்ட் இருக்கிறது. அதன்படி மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு என்று அடுத்தடுத்த சீரியல்களில் கோபிகிருஷ்ணன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

 திரு டிவி

திரு டிவி

இயக்குநர் திருமுருகன் தனது பெயரில் திரு டிவி என்று யூடியூப் சானல் துவங்கி நடத்தி வருகிறார். இதில் நாதஸ்வரம் சீரியலின் எபிசோட் முழுக்க பார்க்க முடியும். அடுத்து, கல்யாண வீடு சீரியலும் இதில் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், கடந்த வருடம் இதன் உரிமையை சன் நெக்ஸ்ட் வாங்கிக்கொண்டது.

 கல்யாண வீடு ஸ்டார்ஸ்

கல்யாண வீடு ஸ்டார்ஸ்

இதனால், கல்யாண வீடு சீரியலின் அண்மைய எபிசோடுகளை யூடியூப் சானலில் ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது திருமுருகனுக்கு. இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருக்கும் கல்யாண வீடு சீரியல் ஸ்டார்ஸ் திரு டிவியின் கோபிஸ் கிட்சன் நிகழ்ச்சிக்கு தங்களது பங்களிப்பை தந்து வருகின்றனர்.

 திருமுருகன் ரைஸ்

திருமுருகன் ரைஸ்

ஒரு எபிசோடில் திருமுருகன் தான் பேச்சிலராக இருந்தபோது மிகச் சுலபமாக அதே சமயம் அதிகம் ருசியுடன் சமைத்த ஒரு வெஜிடபிள் ரைஸ் செய்து காண்பித்தார். இதில் ஸ்வேதா, அனுசுயா, கலா சிஸ்டர்ஸ் உள்ளிட்டவர்களும் சமையல் செய்து காண்பித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+