Thirumanam Serial: அனிதாவை ஆளை மாத்தி ஓடிப்போக வச்சுட்டாய்ங்களே!
சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் நல்ல ரேட்டிங்கில் இருக்குது. அதுவும் இப்போ சோக கீதம் பாடி வருவதால் ரொம்ப கடுப்பாக இருக்குது.
அனிதாவாக முதலில் நடிச்ச பொண்ணு அழகா இருந்துச்சு. பார்க்க நவீனுக்கு பொருத்தமா இருந்துச்சு.
பெண்ணையும் மாத்தி, கல்யாண மண்டபத்தில் அத்தை பையனுடன் கல்யாணம் நடக்க இருக்கையில் கல்யாண மண்டபத்தை விட்டு ஓடிப்போக வச்சுட்டாக!

நவீன் அனிதா
திருமணம் சீரியலில் சந்தோஷ் ஜனனியின் ஊடல்தான் கதையின் சுவாரஸ்யமே. அதை விடுத்து இப்போது ஜனனியின் தங்கை அனிதா மற்றும் சந்தோஷின் தம்பி நவீனின் காதலை கையில் எடுத்து கதையை நகர்த்தி வந்தார்கள்.

அனாமிகா அனிதா
அனிதா அனாமிகா என்கிற பெயரில் நவீனை போனில் மட்டுமே காதலித்து வந்தாள் அப்போது அனிதாவாக வேறு ஒரு பெண் நடித்து வந்தார். அந்த பெண் பார்க்க நன்றாக இருந்தார். இப்போது அனிதாவையும் மாற்றி விட்டார்கள். அனிதாவுக்கு அத்தை பையனைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கண்டிஷன் போட்டு நிச்சயமும் செய்துவிட, காதலை மறந்து அப்பா அம்மா பேச்சை கேட்டு கல்யாணத்துக்கு சம்மதமும் தெரிவித்து விடுகிறாள்.

அனிதா நவீன்
அனிதாவால் நவீனையும் நவீனால் அனிதாவையும் மறக்க முடியாமல் இருவரும் தவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட இருவரும் கல்யாண மண்டபத்தில் காணாமல் போகின்றனர்.

அம்மா இறந்து
அனிதா நவீன் காணாமல் போன செய்தி கேட்டு அனிதாவின் அம்மா இறந்து விடுகிறார். அப்பா ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாரா. செய்தி கேட்டு வீட்டுக்கு வரும் அனிதாவை அண்ணன் அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இப்படி கதை போவது நன்றாக இல்லை.
திருமணம் சீரியல் எந்த அளவுக்கு ஜனனி சந்தோஷ் கதையால் சுவாரஸ்யமாக இருந்ததோ அந்த அளவுக்கு நவீன் அனிதாவால் போரடிக்கிறது.
போகப் போக ரேட்டிங்கில் இடம் பிடிக்காமல் போனாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications