Thirumanam Serial: சந்தோஷால் சக்தியும் அழறா ஜனனியும் அழறா... என்னடா செய்ய போறே?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷ் சந்தோஷ்னு இரண்டு பெண்கள் ஆசையாக இருக்கிறார்கள். ஒருத்தி காதலி காதலி, இன்னொருத்தி மனைவி ஜனனி.
சந்தோஷ் சக்தியை காதலிக்க, அவள் மலேசியா போயிருந்த நேரத்தில் ஜனனிக்கும் சந்தோஷுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. சந்தோஷ் காதலி சக்தியின் நினைவால் மனைவி ஜனனியுடன் வாழ முடியாமல் தவிக்கிறான்.
ஜனனியை விவாகரத்து செய்ய வைக்க சம்மதம் சொல்ல வச்சுடறான். விவாகரத்து கேஸ் கோர்ட்டில் இருக்கும் நிலையில், காதலி சக்தி மலேசியாவில் இருந்து வந்திருக்கா.

சக்தி ஜனனி
ஜனனி சக்தியை பார்த்து, என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதோட, தங்கச்சிக்கு கல்யாணம் நடக்க போகுது. அதுவரைக்கும் சந்தோஷ எனக்கு புருஷனா இருக்கட்டும் சக்தி. அதுக்குப் பிறகு நீங்க அவரை எங்க வேணா கூட்டிகிட்டு போங்கன்னு கெஞ்சி கேட்கறா ஜனனி.சக்தி ஒன்றும் பேசாமல் இருக்க, தன் கழுத்தில் தாலி கட்டியவனையே, தன் புருஷனாக நடிக்க சக்தியிடம் அனுமதி கேட்கிறாள் ஜனனி. என்ன கொடுமை இது...!

சந்தோஷ் மீது
ஜனனிக்கு சந்தோஷ் மீது ஆசை இருந்தாலும், புருஷனுடன் அவள் வாழ வேண்டும் என்று நினைத்தாலும், சக்தியை மறக்க முடியாமல் தவிக்கும் சந்தோஷிடமிருந்து நாம் விலகி விடுவதுதான் நல்லது என்று முடிவுக்கு வந்துடறா ஜனனி. ஆனாலும் சந்தோஷை அவள் உள்ளுக்குள் காதலிக்கிறாள்.

தற்கொலை முயற்சி
சந்தோஷ் இந்தியா வந்திருக்கும் தன்னிடம் அதிக நேரம் இருப்பதில்லை.ஜனனி ஆஸ்பத்திரியில் உடம்பு முடியாமல் இருக்க, அவளுடனே இருக்கிறன் என்று கற்பனை செய்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று விடுகிறாள் சக்தி. பதறிப் போன சந்தோஷ், அவளை நண்பனுடன் சென்று காப்பாற்றி விடுகிறான்.

ஜனனி சக்தியுடன்
சந்தோஷுக்கு எங்கே இருக்கீங்கன்னு போன் செய்து ஜனனி கேட்க, சக்தி தற்கொலைக்கு முயற்சி செய்திட்டா ஜனனி.இப்போ அவ கூட ஆஸ்பத்திரியில் இருக்கேன்னு சொல்றான்.பதறிய ஜனனி, சக்திகிட்டே போனை குடுங்க நான் பேசறேன்னு சொல்றான். சக்தி பொறுமையா இருங்க...நான்தான் உங்ககிட்ட சொன்னேனே.. நான் கொஞ்ச நாளில் விலகிப் போயிருவேன். அப்புறம் நீங்க காதலிச்ச சந்தோஷ் கூட நீங்க சந்தோஷமா இருக்கலாம்னு சொல்றா.
சரி ஜனனின்னு சொல்லிட்டு, இங்கே சந்தோஷும் சக்தியும் ஒருத்தரை ஒருத்தர் காதலா பார்த்துக்கறாங்க. சக்தி காதலில் அழறா.ஜனனி பொண்டாட்டி என்கிற உரிமை இருந்து கை விட்டுப் போகும் சந்தோஷை நினைச்சு அழறா. இதெல்லாம் சரியாடா சந்தோஷ்?












Click it and Unblock the Notifications