Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thirumanam Serial: சந்தோஷ் மாட்டிகிட்டான் நல்லா நடிக்கிறடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் காதலிக்கும், மனைவிக்கும் நடுவில் மிக நன்றாக காய் நகர்த்துகிறான் சந்தோஷ். உண்மையில் இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஆணின் நிலை இப்படித்தான் இருக்குமா?

ஜானகியிடம் வந்தால் வேறு சந்தோஷையும், சக்தியுடன் இருக்கும்போது வேறு சந்தோஷையும் நம்மால் பார்க்க முடிகிறது.ஆனால், அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத மாதிரி ஒரு முக பாவனை.

காதலி சக்தி, மனைவி ஜனனி இவர்களில் ஜனனியை விவாக ரத்துக்கு சம்மதிக்க வச்சுடறான் சந்தோஷ். ஆனால், அவளையும் இழக்க முடியாமல், இவளையும் இழக்க முடியாமல் என்ன ஒரு ஆண் மனசு இது?

சந்தோஷ் சக்தி

சந்தோஷ் சக்தி

சக்தி மலேசியாவில் இருந்து வந்திருக்கிறாள், சந்தோஷை மலேசியாவுக்கு அழைச்சுட்டு போயி, தன்னுடைய குடும்பத்து ஆட்களிடம், இவன்தான் நான் காதலிக்கும் சந்தோஷ் .இவனை எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்கப் போறேன்னு சந்தோஷ்கிட்ட சொல்லிட்டு, மலேசியாவுக்கு வரியா சந்தோஷ்னு கேட்கறா. இரு சக்தி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துடறான் சந்தோஷ்.

மனைவி ஜனனி

மனைவி ஜனனி

மனைவி ஜனனியுடன் மலேசியாவுக்கு போயிட்டு வர சொல்லி சந்தோஷ் அப்பா இருவரிடமும் சொல்றார். இந்த சமயத்தில் ஜனனிக்கு உடம்பு சரியில்லாமல் போயிருது. இதை சாக்கா வச்சு ,நாம் சக்தி கூட மலேசியா போகலாம்னு முடிவு செய்த சந்தோஷ், சக்தி உன் கூட நான் மலேசியாவுக்கு வரேன்னு சொல்லி அவனை குஷி படுத்திடறான். அவளும், உன் கூட எனக்கு ஃபிளைட்ல வர்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சந்தோஷ்ன்னு சொல்றா.

கேன்சல் டிரிப்

கேன்சல் டிரிப்

மலேசியா டிரிப்பை கேன்சல் பண்ணிட்டேன் சந்தோஷ்.ஜனனிக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல வேணாம்னு சொல்றார் அப்பா. இதை எப்படி சக்திகிட்ட சொல்றதுன்னு யோசிச்சுட்டு, ஒரு வழியா சொல்லிடறான். சக்தி கோச்சுக்கிட்டு, ஆஃபீசுக்கே வந்து கலாட்டா பண்றா. எதுக்கு டிரிப்பை கேன்சல் பண்ணினேன்னு. அவளை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு போனவன் உன்னைத் தவிர என் மனசில் யாருக்கும் இடமில்லை சக்தி. கண்டதை நினைச்சு குழப்பிக்கறதை விட, நாம காதலிச்ச அந்த நாட்களை நினைச்சு பாரு சக்தின்னு கெஞ்சறான். லவ் டயலாக் விடும்போது ஜனனி போன் பண்ண அப்புறம் பேசுங்க ஜனனின்னு சொல்லிட்டு வச்சுடறான்.

சக்தி ஜனனி

சக்தி ஜனனி

ஆஸ்பத்திரிக்கு போயி சக்தியை பார்த்து பேசிட்டு வரலாம்னு போறா சக்தி. அங்கே ஜனனியைப் பார்க்கப் போகிறான் சந்தோஷ். அங்கே நீங்க பேசும் போது நிலைமை சரி இல்லை ஜனனி. அதனாலதான் அப்புறமா பேசுங்கன்னு சொல்லி வச்சுட்டேன்னு சொல்றான்.அப்போது வந்த சிஸ்டர் ஊசி போட்டுட்டு, சார் நீங்க வந்து இந்த இடத்தில் தேய்ச்சு விடுங்கன்னு சொல்றாங்க. மெதுவா தேச்சுவிட்டுக் கொண்டே இருக்கான் சந்தோஷ். ஜனனி அவன் முகத்தையே பார்க்க, இவனும் இமைக்காமல் பார்த்துக்கிட்டு இருக்கான்.

இந்த நேரத்தில் சக்தி என்ட்ரி, பார்த்துட்டு இருவரையும் கத்திட்டு போறா. ஜனனி, ஏங்க அவங்களை போயி சமாதானப் படுத்துங்கன்னு ஜனனி சொல்ல, .போகட்டும் விடுங்க ஜனனி. அவ கோவத்துல இருக்கான்னு ஜனனிக்கு ஆதரவா பேசறான்.அங்கே போனால் அப்படி,இங்கே போனால் இப்படி. நல்லா நடிக்கறான்ப்பா சந்தோஷ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+