Thirumanam serial: அடப் பாவிங்களா... இன்னுமா ஒண்ணு சேராம இருக்கீங்க?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கடந்த ரெண்டு வருஷமா கல்யாணமான ஜோடி இன்னும் ஒண்ணு சேரலைங்க.
அது மட்டுமா இன்னும் ஒருத்தரை ஒருத்தர் வாங்க போங்கன்னு மரியாதையா கூப்பிட்டுக்கிட்டு ரொம்ப மரியாதையா பிஹேவ் பண்ணி வீட்டாரை நம்ப வச்சுக்கிட்டு இருக்காங்க.
அண்ணி மாயா மட்டும் இவங்க உண்மையா சேர்ந்து வாழலைன்னு தெரிஞ்சுக்கிட்டு, தந்திர வேலைகள் எல்லாம் செய்யறாங்க.

சந்தோஷ் சக்தி
சந்தோஷ் சக்தியை காதலிச்சு, ஜனனியை கல்யாணம் செய்துக்கறான். சக்தியை மறக்கவும் முடியலை..ஜனனியை ஏத்துக்கவும் முடியலை. சக்தி மலேசியாவிலிருந்து வந்த உடன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கன்னு ஜனனி சொல்ல, சந்தோஷும் ஜனனியும் விவாகரத்து என்கிற உடன்படிக்கைக்கு வர்றாங்க.

வீட்டில் நடிப்பு
விவாகரத்து விஷயங்கள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டு இருக்க, வீட்டில் புருஷன் பொண்டாட்டி போல நடிக்கறாங்க. ஜனனிக்கு சந்தோஷ் மேல் ஆசை இருந்தாலும்.சக்தியைத்தான் அவன் மனசில் நினைச்சுகிட்டு இருக்கான்னு விட்டுக் கொடுக்க நினைக்கறா.

ஜனனி சக்தி
சக்தி மலேசியாவில் இருந்து வந்தவள், சந்தோஷை அடைய நினைக்கறதோடு, ஜனனியும், சந்தோஷும் சேர்ந்து வாழ்ந்து இருப்பதாக ஜனனியின் மனசை நோகடிக்கறா. இதனால், சக்தி மீது லேசாக வெறுப்பு வருது சந்தோஷுக்கு. சக்தி சந்தோஷை கடத்தி, ஜனனி அவங்களை கண்டு பிடிச்சு இப்போ சக்தியை சுத்தமா சந்தோஷ் வெறுக்கும் நிலை.

இருவரும் இன்னும்
ஆனால்,ஜனனியும், சந்தோஷும் இன்னும் ஒன்றாக வாழ்வது பற்றி முடிவு எடுக்கவே இல்லை.அண்ணி மாயாவால் பல பிரச்சனைகள் வருது.அதை எதிர்கொள்ள தயாராக இருந்தும், எப்படி எந்த விஷயத்தில் மாயா சூழ்ச்சி வலை பின்றாங்கன்னு தெரியலை.
இந்த நிலைமையிலும் பிரச்சனை பிரச்சனை என்று ஓடிக்கொண்டு இருக்கும் இருவரும் இன்னும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications