Thirumanam serial: சக்தி விலக நினைக்கும் போது எதுக்கு இந்த மாயா இப்படி...?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சக்தி சந்தோஷை விட்டு விலகிப் போயிடலாம் என்று நினைக்கும் போது சந்தோஷின் அண்ணி, மாயா சக்தியை சந்திக்க என்ட்ரி கொடுக்கிறார்களே எதுக்கு?
சக்தி சந்தோஷின் மனைவி ஜனனியின் தோழி என்றுதானே இதுவரைக்கும் மாயாவுக்கு தெரியும். இப்போது சக்தியும், சந்தோஷும் சேர்ந்து சுத்த, அதை பார்த்த மாயாவுக்கு இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று சந்தேகம் வருகிறது.
எப்போதும் வீட்டில் மூத்த மருமகளான மாயா. எப்போது எல்லா சொத்துக்களையும் தான் ஆட்டையை போடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கு இந்த ரகசியம் உதவும் என்றும் நினைக்கறாங்க மாயா.

ஜனனி சக்தி
பொண்டாட்டி ஜனனி பக்கம் போயிட்டான் தன் காதலன் சந்தோஷ் என்று மனம் நொந்து தற்கொலைக்கு முயன்ற சக்தியை சந்தோஷ் காப்பாற்றி, உன்னை மட்டும்தான் சக்தி நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.நீ இல்லாமல் நான் வாழ மாட்டேன்னு டயலாக் எல்லாம் பேசிட்டு அவளை சமாதானம் செய்திட்டு வந்துடறான்.

டிஸ்சார்ஜ் இருவரும்
உடம்பு சரியில்லாமல் இருந்த ஜனனிக்கும் இன்றுதான் டிஸ்சார்ஜ், தற்கொலைக்கு முயன்ற சக்திக்கும் இன்னிக்குத்தான் டிஸ்சார்ஜ் நாள்.முதலில் பொண்டாட்டி ஜனனியை வீட்டில் கொண்டு விட்டுட்டு, பிறகு சக்தியை அழைச்சுட்டு போகலாம்னு சந்தோஷ் கிளம்பறான். ஜனனியை வீட்டுக்கு அழைச்சுட்டு போகும்போதே சக்தி போன் பண்றா.

சக்தி என்ன?
என்ன சக்தின்னு போனை அட்டெண்ட் செய்து கேட்க, சந்தோஷ் எங்கே இருக்கே...இன்னிக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்றாங்கன்னு சொல்றா சக்தி. ஜனனியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைச்சுட்டு போயிட்டு இருக்கேன்.கொஞ்சம் இரு சக்தி அவங்களை விட்டுட்டு வந்துடறேன்னு சொல்றான்.உனக்கு ஜனனிதன் முக்கியம்..நான் இல்லை.. உன் குடும்ப கவுரவம் இதெல்லாம் முக்கியமா இருந்தால் என்னை எதுக்கு சந்தோஷ், ஜனனியை டைவர்ஸ் பண்ணிட்டு வந்துடறேன்னு வெயிட் பண்ண வச்சேன்னு சொல்லி போனை வச்சுடறா சக்தி.

கோவமா சக்திக்கு?
என்னங்க சக்தி கோச்சுக்கறாங்களா? எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க.என்னை விட்டுட்டு போயி அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டில் விட்டுட்டு வந்துருங்கன்னு ஜனனி சொல்ல, சக்தி ரொம்ப மாறிப் போயிட்டா ஜனனி. உங்களையும், என்னையும் ரொம்ப சந்தேகப் படறா. அதுக்குள்ளே நானே டிஸ்சார்ஜ் ஆகி போறேன்னு சொல்றா.

கவுரவமான குடும்பம்
எனக்கும் கவுரவமான குடும்பம் இருக்கு. என்னை பத்தி கவலைப் படவும், அப்பா அம்மா இருக்காங்க. நான் மலேசியாவுக்கு போறேன்.என்னை விட்டு போயிருன்னு கத்தியை காண்பிச்சு மிரட்டிட்டு, மலேசியாவுக்கு துணிகளை எடுத்து பேக் பண்ணி வைக்கறா. சந்தோஷும் செய்வதறியாமல் வெளியில் வந்துடறான்.
அவன் போனதும் காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்து பார்த்தால், குடும்பத்தை கெடுக்கும் சகுனியான மாயா வந்து நிக்கறாங்க. என்ன சொல்லி அவள் மனசை மாற்றி சந்தோஷ் குடும்பத்தை கெடுக்க போறாங்களோ!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications