Kalyana Veedu Serial: வயசான பெண்ணை இப்படியா பேச வைப்பீங்க திருமுருகன்?
சென்னை: இயக்குநர் திருமுருகன் தனது கல்யாண வீடு சீரியலில் வயதான ஒரு மூதாட்டியை வைத்து நடுத்தர வயதுக்கும் குறைவான பெண் தாயானதை இழிவு படுத்தி பேச வைத்திருக்கிறார் திருமுருகன்.
சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் இத்தனை வயதிலும் திருமுருகன் கதாநாயகனாக காதலித்து ரொமான்ஸ் செய்து நடிப்பது தவறில்லையாம்.
நடுத்தர வயதுக்கும் குறைவான கதாபாத்திரம் உள்ள ஒரு பெண். கர்ப்பவதியானதை தவறு என்று குற்றம் சுமத்தும் படியும், அதை கோபியின் அம்மாச்சி கர்மம் அரைக்கிழவி மாசமாவது என்று கேட்பது போலவும் கதை அமைத்து இருக்கார் திருமுருகன்,.

ஸ்வேதாவுடன் போஸ்டர்
கோபிக்கும் சூர்யாவுக்கும் கதைப்படி கல்யாணம் நிச்சயம் ஆகப் போகிறது. கதைப்படி ஸ்வேதா தனது புருஷனுடன் சேர்ந்து வாழவும் ஆரம்பித்துவிட்டார். இன்னமும் கோபியின் தோளில் கையை போட்டபடி இருக்கும் போஸ்டரை மாற்றவில்லை என்று முன்னமேயே குறிப்பிட்டு இருந்தோம். அதை எல்லாம் கண்டுக் கொள்ளவில்லை ஒரு இயக்குநராக திருமுருகன்,.

குற்றாலத்துக்கு போனபோது
குற்றாலத்துக்கு குடும்பமாக போனபோது கோபியின் தங்கை நாத்தனாருக்கு பதின் பருவத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது. அடுத்து ஒரு குழந்தை உண்டாகி விட்டது. இது என்னவோ ஒரு கொலைக் குற்றம் போல தம்பதியரே மறைத்து மறைத்து வைக்கிறார்கள். உண்டான குழந்தையை கலைக்கவும் முடியாது என்று டாக்டர் சொல்லிவிட சரி பெத்துக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

நீ அரை கிழவி
பாவம் பிள்ளைத்தாய்ச்சி பெண் இல்லையா ... கோபியின் தங்கையும் உண்டாகி இருப்பதால்.. அவளுக்கு சாப்பிட கொடுக்கும் பொருள் மீது எல்லாம் இவளுக்கும் சாப்பிட ஆசை வந்துவிடுகிறது. சாப்பிட்டால் எல்லாரும் வினோதமாக பார்க்கிறார்கள். ஒரு வழியாக காசிக்கு போய்விட்ட இவளின் அம்மாவும் வந்துவிட உண்மையை அவரிடம் சொல்லும்போது அம்மாவே இந்த வயசில எப்படிடி பிள்ளையை பெத்துக்கறதுன்னு பம்மறாங்க.

அம்மாச்சி பேச்சு
இடையில் கோபியின் அம்மாச்சி தன் பேத்திக்கு ஊறுகாய் கொண்டு வர பேத்தியின் நாத்தனார் ஊறுகாயை வழிச்சி திங்க, என்னடி நீ முழுகாம இருக்கறவங்கதான் ஊறுகாயை வழிச்சி திம்பாங்க, நீயுமான்னு கேட்கறாங்க. என் பொண்டாட்டியும்தான் முழுகாம இருக்கான்னு அவ புருஷன் சொல்ல.. ஆமா அரை கிழவி முழுகாம இருக்காளான்னு கிண்டல் அடிக்கறாங்க அம்மாச்சி.
இதெல்லாம்..நல்லாவா இருக்கு திருமுருகன்? மூளை பொங்கி வழிஞ்சா இப்படி ஆகிருமா? இப்படி பெண்களை பெண்களை விட்டே நக்கல் அடிக்கத் தோணுமா?
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications