அர்ச்சனாவை பிரிய காரணமே இதுதான்.. வீடியோ வெளியிட்டு டேக் செய்த விசித்திரா.. மாட்டிக் கொண்ட மாயா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று அர்ச்சனா விசித்ராவை குறித்து பேட்டியில் பேசியிருந்தார். அதாவது விசித்ரா என்னிடம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தார். பிறகு எதற்காக என்று தெரியவில்லை என்னை விட்டு பிரிந்து விட்டார் என்று பதில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று விசித்திரா தான் எப்படி அர்ச்சனாவிடமிருந்து பிரிந்தேன் என்பது பற்றி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதற்கு அர்ச்சனாவை டேக் செய்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ச்சனா பி ஆர் உதவியோடு வெற்றி பெற்றார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வந்த நிலையில் அதற்கு முதல் முறையாக நேற்று விளக்கம் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பிடித்த பிடிக்காத பல விஷயங்கள் பற்றியும் அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருந்தார்.
அப்போது நான் விசித்திரா அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவங்க ஆரம்பத்தில் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தாங்க. ஆனால் பாதியில் என்னை விட்டு விலகிட்டாங்க. அவங்க மட்டும் ஆரம்பத்தில் எனக்கு சப்போர்ட்டாக இல்லை என்றால் நான் உடைந்து போய் இருப்பேன். இத்தனை நாட்கள் நான் பிக்பாஸுக்குள் இருந்திருக்க மாட்டேன். அத்தனை பேர் என்னை சுற்றி நின்று என்னை டார்கெட் செய்த போது எனக்கு உறுதுணையாக இருந்தது விசித்திரா மேம் தான்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விசித்திரா மேம் என்னிடம் ஃபோன் பண்ணி பேசவே இல்லை. அதுபோல நான் விசித்திரா மேம்க்கு போன் பண்ண மாட்டேன். ஏன்னா அவங்க என்கிட்ட பேசணும்னு நினைக்கிறாங்களா? இல்லையான்னு தெரியல? அவங்கள நானா தொந்தரவு பண்ண மாட்டேன். அவங்க இந்த பேட்டியை பார்த்ததும் என்கிட்ட பேசணும்னு தோணுச்சுன்னு சொன்னாங்கன்னா நான் கண்டிப்பா அவங்களை நேரில் சந்திப்பேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விசித்திரா இன்று தன்னுடைய instagram ஸ்டோரியில் தான் எதற்காக அர்ச்சனாவிடமிருந்து பிரிந்தேன் என்பதை அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதாவது அந்த வீடியோவில் மாயாவும் விசித்திராவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா நீங்க யாரையும் நம்பாதிங்க, உங்களைப் பற்றி முதுகுக்கு பின்னாடி நிறைய பேசுறாங்க.
நீங்க உங்களுக்காக விளையாடுங்க, உங்களை மட்டும் நேசியுங்கள். தேவையில்லாமல் அதிக அழுத்தத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள் என்று மாயா அட்வைஸ் செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோவில் அர்ச்சனாவை விசித்திரா டேக் செய்து வைத்திருக்கிறார். அதனால் மாயா தான் என்னுடைய மனதை மாற்றிவிட்டார் என்று சொல்லாமல் சொல்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் கடைசியில் மாயா மாட்டிக்கொண்டார் என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications