கமல் படங்கள் மட்டும் பார்க்க காரணம் இதுதான்.. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சரோஜாதேவி
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய சினிமா வாழ்க்கை பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தான் நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்களை தவிர வேறு எந்த திரைப்படங்களையும் பார்ப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் திரைப்படங்களை மட்டும் தான் விரும்பி பார்ப்பதற்கு காரணம் பற்றி வெளிப்படையாக சரோஜாதேவி பேசியிருக்கிறார்.

70 ஸ் 80ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சரோஜாதேவி பல வருடம் கழித்து தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் தனக்கு சினிமா துறையில் மனம் கவர்ந்த நடிகர் நடிகைகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து பல தகவல்களை சரோஜாதேவி கூறி இருக்கிறார்.
அந்த காலத்தில் வருடத்திற்கு 30 படங்கள் வீதம் படும் பிசியாக நடித்திருக்கிறார். இவருடைய கால் சீட்டுக்காக எம்ஜிஆர் முதல் சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களும் காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே சரோஜாதேவி மீது கோபம் கொண்டதே கிடையாதாம். ஏனெனில் அவர்கள் பிஸியாக நடித்து வந்ததை அனைவரும் பெருமையாக தான் நினைத்திருந்தார்களாம்.
அந்த காலத்தில் வருடத்திற்கு 30 படங்கள் வீதம் படும் பிசியாக நடித்திருக்கிறார். இவருடைய கால் சீட்டுக்காக எம்ஜிஆர் முதல் சிவாஜி, ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களும் காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே சரோஜாதேவி மீது கோபம் கொண்டதே கிடையாதாம். ஏனெனில் அவர்கள் பிஸியாக நடித்து வந்ததை அனைவரும் பொருமையாக தான் நினைத்திருந்தார்களாம்.

அதைத்தொடர்ந்து இன்றைய கால சினிமாவை பற்றியும் அதில் சரோஜாதேவி பேசியிருக்கிறார். இந்த கால சினிமாக்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று படம் டிவியில் போட்டாலும் நான் பார்க்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். புதிய படங்கள் எதையும் நான் பார்க்க மாட்டேன் என்றும் பழைய படங்கள் போட்டால் மட்டுமே பார்ப்பேன் என்றும் கூறுகிறார்.
மேலும் கடைசியாக பார்த்த படம் பொன்னியின் செல்வன் என்றும் கூறியிருக்கிறார். அதுபோல பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டிய சரோஜா தேவி கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தை மட்டும் நான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். எந்த திரைப்படத்தையும் பார்க்க மாட்டேன் என்ற கூறிய சரோஜாதேவி கமல் படத்தை மட்டும் பார்ப்பதற்கு காரணம் கமலை சிறுவயதிலிருந்து தான் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications