இம்புட்டுத்தாங்க சீரியல்.. இதுக்கா இப்படி?!
சென்னை: தொலைகாட்சி சீரியல்களை ஒரு மாசம் பார்க்க தவறி விட்டாலும் ஒரு நாள்பார்த்தால் கதை புரிஞ்சுரும். சும்மா தங்களுக்கு பிடிச்ச நடிகர் நடிகைகளை பார்க்க முடியலைன்னு வேணும்னா படபடன்னு இருக்கலாம்.
கதை புரியாது என்று கவலைப்படத் தேவையில்லை. ஆனாலும் சீரியல் நேரங்களில் மக்கள் டிவி முன் உட்கார்ந்துவிட வேண்டும். இல்லை அதிக ஒலி வச்சுட்டு காதில் கேட்டபடியாவது வேலை செய்ய வேண்டும்.
மக்கள் இப்படி இருக்கும் வரை மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் சன் டிவி காலையில் ஆரம்பித்து இரவு 11 மணி வரை சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

குழப்பம் குடும்பத்தில்
ஒவ்வொரு சீரியலிலும் ஒரு சில காட்சிகளாவது குடும்பத்தில் யாராவது ஒருவரால் குழப்பம் ஏற்படும்...இல்லை இரண்டு பெண்கள் சேர்ந்து யாரையாவது பழிவாங்கத திட்டமிடுவார்கள். இப்படி திட்டமிடுவதை ஒருவர் ஒட்டு கேட்பார்கள்.

காவல் நிலையம்
போலீஸ் ஸ்டேஷனில் போலீசிடம் புகார் அளிப்பது, இல்லை ஜெயில் தண்டனை பெற்று அங்கு சிலரால் முக்கிய கதாபாத்திரம் துன்புறுத்தப் படுவது.. பொய் வழக்குகள்.. போலீஸ் பணம் வாங்கிகிட்டு பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பது இப்படி சில காட்சிகள் இருக்கும்.

ஆஃபீஸ் செட்டப்
ஸ்ட்ரிக்ட் ஆஃ பீசர்னு காண்பிக்க ஆஃபீஸ் செட்டப் காட்சிகள் இருக்கும். காதலர்கள் சும்மாவேனும் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இப்படி கண்டிப்பாக இருக்கும். இதுக்கு நடுவில் எதிரி ஆட்டோ, அல்லது காரில் போகிறார்கள் என்றால் அவர்களை பின் தொடரும் காட்சிகள் இருக்கும்.

கொஞ்சம் கதையோடு
இவைகளுக்கு நடுவில் கொஞ்சம் கதையோடு பயணித்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் சீரியல் ஹிட். இந்த காட்சிகள் இல்லாமல் எதாவது சீரியல் பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கு யோகம்தான்.ஆனால், இம்புட்டுதாங்க தொலைக்காட்சி சீரியல்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications