Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thenmozhi BA Serial: ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கமோ...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருமகள்களை என்னதான் கொடுமைப் படுத்தினாலும் சில மாமியார்களுக்கு ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கமோன்ற எண்ணமே வருவதில்லை.

அப்படித்தான் இருக்கிறது விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் கதையும்.

தேன்மொழியைத்தான் மாமியார் பட்டினி போட்டே வாட்டுகிறார்கள் என்றால், அவள் அப்பாவும் இன்று மாட்டிக் கொண்டார்.

 பதவி ஏற்பது

பதவி ஏற்பது

பதவி ஏற்பது என்னவோ பெரிய திருவிழா போல நடக்கும் என்று கனவு கண்டுகொண்டு வரும் தேன்மொழியை பதவி ஏற்பது என்றால், ஒரு கை எழுத்து போடுவதுதான் வேறு ஒன்றும் இல்லை தேன்மொழி என்று கூல் படுத்தும் விஏஓ. எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது.

 அப்பா தேன்மொழி

அப்பா தேன்மொழி

அப்பாவுடன் பதவி ஏற்ப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வரும் தேன்மொழியை பழி வாங்கும் விதமாக, நெல் மூட்டைகளை தூக்கிப் போடும் வேலைகளை செய்ய நாசூக்காக சொல்ல, தேன்மொழியின் அப்பா மூட்டைகளை தூக்கி போடுவது பாவம்தான். ஏழைகள் என்றால் பணக்காரர்களுக்கு எப்போதும் இளக்காரம்தான்.

 கட்சிக்காரர்களுடன் மீட்டிங்

கட்சிக்காரர்களுடன் மீட்டிங்

தேன்மொழி கட்சிக்காரர்களுடன் மீட்டிங்கில் இருக்க, வேண்டும் என்றே காபியைக் கொட்டும் மதர் இன் லா, அதைத் துடைத்து விட சொல்லும் கட்சிக்காரர்கள். துடைக்கும் அப்பா என்று ஏழைகளின் கண்ணில் மட்டும் கண்ணீர் வரத்துக்கு பஞ்சம் இல்லாதபடி மான பங்கம் செய்யும் செயல்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.

 ஓவராத்தான் போறோமோ

ஓவராத்தான் போறோமோ

ஓவராத்தான் போறோமோ என்று மாமியாரும் நினைக்கலை.. நாம் ஊராட்சி மன்றத் தலைவராச்சேன்னு தேனுவும் இன்னும் பொங்கி எழலை. தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற உண்மையான கதை இன்னும் சீரியலில் ஆரம்பிக்கவில்லை. எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள் சீரியல் ஆர்வலர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+