நடிகர் பார்த்திபன் முதல் மாரிமுத்து வரை.. சொந்த வீடு கூட இல்லாத இத்தனை பேரா? நல்லா சம்பாதிச்சாங்களே!
சென்னை: சினிமாவில் நன்கு சம்பாதித்தும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?
சினிமாவில் பெருந்தொகை கொடுக்கப்பட்ட போதிலும் சில நடிகர், நடிகைகள் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்தாலே உனக்கெனப்பா நீ நடிகன் என எளிதாக கூறி விடுகிறோம்.
ஆனால் அது எல்லா நடிகர், நடிகைகளுக்கும் பொருந்தாது. வளர்ந்து வரும் நடிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் என்றாலே கார், பங்களா என சொகுசாக இருப்பார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் அவர்களில் சிலர் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பார்ப்போம். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் கவின். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு டிவிஸ்ட்டை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற கவின் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

டாடா என்ற படம் அண்மையில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த படத்திற்கு பிறகு கவினின் மார்க்கெட் உயர்ந்து அவர் சம்பளத்தில் கோடியை நெருங்கி விட்டார். ஆனாலும் அவருக்கு சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறார். அது போல் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து அந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம். அவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.
அவர் ஒரு இயக்குநர். வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கை கொடுக்காததால் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அவர் அந்த சீரியலில் ஏ எம்மா தண்ணி கொண்டு வாங்க என்று அழைப்பது மிகவும் பிரபலம் ஆகும். இந்த சீரியலில் அவர் ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். ஏற்கெனவே சொந்த வீடு இல்லாத நிலையில் தற்போது சென்னையில் இடம் வாங்கி சொந்தமாக வீட்டை கட்டி வருகிறாராம்.
அது போல் இயக்குநர் பார்த்திபன். இவர் 30ஆண்டுகளுக்கு மேலாக படங்களை இயக்கி வருகிறார். பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தலைசிறந்த நடிகர், பல்வேறு திறமைகளை நிரூபித்திருக்கிறார். அப்படியிருந்த போதிலும் பார்த்திபன் வாடகை வீடடில்தான் வசித்து வருகிறார்.
மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. இவர் மோகன்லால் , மம்முட்டி நிகராக பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு லட்சக்கணக்கில் காசு கிடைத்தது. இவ்வளவு காசு வைத்திருந்தால் வருமான வரித் துறை ரெய்டு வந்துவிடும் என கூறி அவருடைய உறவினர்கள் ஏமாற்றி வாங்கிக் கொண்டனராம். இதனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அது போல் பிரென்ட்ஸ் படத்தில் நடித்திருந்த விஜயலட்சுமி. இவர் சில படங்களில் நடித்திருந்தார். இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமிக்கும் சொந்தமாக வீடு இல்லை. அவ்வாறு சென்னை வந்த போதுதான் சீமான், ஹரி நாடாரிடம் சொல்லி ஒரு வீட்டில் தங்க வைத்ததாகவும் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
அது போல் பருத்திவீரன், தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கஞ்சா கருப்பு. இவரது மனைவி டாக்டர். இதையடுத்து சொந்தமாக வீடு வாங்கினார். ஆனால் படம் தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய கடன வாங்கி வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications