சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி..இந்த வாரமே முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்..எதிர்பாராத நேரமாற்றம்
சென்னை: தொலைக்காட்சியில் சீரியல்களை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் மட்டும் நான்கு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வருகிறது. அதுவும் மக்களின் வரவேற்பு பெற்று பல வருடங்களாக ஒளிபரப்பான டாப் சீரியல்களும் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியல்களின் முடிவால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நேரம் மாற்றம் பெற்று இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி இப்போது இணையத்தின் பயன்பாடு காரணமாக செல்லும் இடமெல்லாம் சீரியல் பார்க்க முடிகிறது. தொலைக்காட்சியில் பார்க்காவிட்டால் கூட அடுத்த நாள் செல்போனில் பார்க்கும் வசதி வந்துவிட்டது. அதுபோல சில சேனல்களில் சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு முன்பே காலையில் இணையத்தில் சீரியலை பார்க்க முடிகிறது.

இப்படி பல வசதிகள் வரும்போது சீரியலை விரும்பி பார்ப்பவர்கள் மட்டுமல்லாமல் அதை ட்ரோல் செய்வதற்காகவும் பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரத்தில் நான்கு சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வருவது பற்றி நாம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.

அதைத்தொடர்ந்து இப்போது மேலும் சில சீரியல்கள் முடிவுக்கு வருவது பற்றி தகவல்கள் வெளியாக இருக்கிறது அது பற்றி பார்க்கலாம். சன் டிவியில் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது நாளை ஆகஸ்ட் 17ஆம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்று இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோல ஜீ தமிழில் இந்திரா சீரியல் மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இரண்டும் நாளை ஆகஸ்ட் 17ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.
அதுபோல கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சனீஸ்வரர் சீரியலும் நாளையோடு முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஜீ தமிழில் இந்திரா சீரியல் மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருவதால் அந்த நேரத்தில் இந்த சீரியலுக்கு பதிலாக அடுத்த வாரத்தில் இதயம் சீரியல் ஒரு மணியில் இருந்து 2 மணி வரைக்கும் எப்போதும் போல இரண்டு முதல் மூன்று மணி வரைக்கும் கனா சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

2.30 முதல் 3.30 வரைக்கும் நானே வருவேன் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுபோல சன் டிவியில் வானத்தைப்போல சீரியலுக்கு பதிலாக மூன்று முடிச்சு சீரியல் 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. அது போல கலர்ஸ் தமிழ் சேனலில் சனீஸ்வரர் சீரியலுக்கு பதிலாக சக்கரவர்த்தி என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications