இந்த வாரம் OTT-யில் வெளியாகும் சர்ப்ரைஸ் படங்கள்! மம்முட்டி அதிரடி முதல் ரன்பீர் சிங்கின் கிரைம் வரை
சென்னை: வெயிலின் தாக்கத்தால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடி தளங்கள் விருந்து படைக்க தயாராக உள்ளன. ஆக்ஷன், திரில்லர், காமெடி, குடும்பம், அரசியல் சஸ்பென்ஸ், உண்மை சம்பவங்கள் என அனைத்து வகை ரசிகர்களுக்கும் ஏற்ற புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
குறிப்பாக ரன்பீர் சிங், மாதுரி தீட்சித், கரிஷ்மா கபூர், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படைப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

Dhurandhar: The Revenge
திரையரங்குகளில் வெற்றி பெற்ற 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் தற்போது ஓடிடி ரசிகர்களை கவர வருகிறது. சைக்காலஜி திரில்லர், பழிவாங்கும் முயற்சிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்த திரைப்படத்தில் ஹம்சா அலி மசாரி கதாபாத்திரத்தில் ரன்பீர் சிங் மீண்டும் கலக்கியுள்ளார்.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: JioHotstar
மாதுரி தீட்சித்தின் டார்க் காமெடி
மாதுரி தீட்சித், திரிப்தி திம்ரி, ரவி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள Maa Behen திரைப்படம் குடும்ப டிராமாவுடன் கலந்த டார்க் காமெடியாக உருவாகியுள்ளது. ஒரு மர்ம மரணத்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் அதிலிருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளே படத்தின் கதை.
ரிலீஸ் தேதி: ஜூன் 4
ஓடிடி: Netflix
Brown
பல ஆண்டுகளுக்கு பிறகு கரிஷ்மா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் இது. குற்ற உணர்வுகளால் வாடும் ஒரு போலீஸ் அதிகாரி, கொலை வழக்கை விசாரிக்கும் போது எதிர்கொள்ளும் அதிர்ச்சி உண்மைகளே கதையின் மையம். கரிஷ்மா கபூரின் வித்தியாசமான நடிப்பு இந்த சீரிஸின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: ZEE5
Gullak Season 5
இந்தியாவின் மிகவும் பிரபலமான குடும்ப வெப் சீரிஸ்களில் ஒன்றான குல்லக், ஐந்தாவது சீசனுடன் திரும்பியுள்ளது. குடும்ப உறவுகள், நகைச்சுவை, வாழ்க்கையின் எதார்த்தமான தருணங்கள் ஆகியவற்றை அழகாக பதிவு செய்யும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: SonyLiv
The Pyramid Scheme
விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பிரமிட் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் சேரும் இரண்டு நபர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையே இந்த தொடர் பேசுகிறது. நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களையும் பதிவு செய்யும் இந்த சீரிஸ் கவனம் ஈர்த்துள்ளது.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: Prime Video
Made In India: A Titan Story
இந்தியாவின் மிகப்பெரிய கடிகார நிறுவனமான டைட்டன் உருவான விதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள உண்மை சம்பவத் தொடர் இது. ஜிம் சர்ப் மற்றும் நசீருதீன் ஷா நடித்துள்ள இந்த சீரிஸ் தொழில்முனைவோர் கதைகளை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
ரிலீஸ் தேதி: ஜூன் 3
ஓடிடி: Amazon MX Player
Office Romance
ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு இடையே மலரும் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம்.
காதலை மறைத்து வைக்க முயற்சிக்கும் ஜோடி சந்திக்கும் சிக்கல்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும்.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: Netflix
பேட்ரியாட்
இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'பேட்ரியாட்'. தொழில்நுட்ப கண்காணிப்பு மென்பொருளை தவறாக பயன்படுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடும் நாயகனின் கதை இதில் சொல்லப்படுகிறது. மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் கூட்டணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிலீஸ் தேதி: ஜூன் 5
ஓடிடி: ZEE5












Click it and Unblock the Notifications