This week ott: இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. அதுவும் இத்தனை ஹிட் படங்களா?
சென்னை: திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில வாரங்களில் ஓடிடியில் பல படங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த வாரத்தில் நவம்பர் 28ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என்னென்ன படங்கள்... எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது என்பதை பார்க்கலாம்.
அந்தகன்:நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த அந்தகன் திரைப்படம் இந்தியில் ரிலீஸ் ஆன அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் தான். இந்த திரைப்படத்தில் சிம்ரன், வனிதா, சமுத்திரக்கனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மூன்று மாதத்திற்கு பிறகு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

தீபாவளி போனஸ்: இயக்குனர் ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் தீபாவளி போனஸ். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடித்துள்ளார். தீபக்குமார் டாலா தயாரித்துள்ள இப்படம் நேரடியாக ஆகா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

பிரதர் திரைப்படம்: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் தான் பிரதர். பிரதர் படம் எதிர்பார்ப்போடு வந்தது, ஆனால் பாக்ஸ் ஆபீசில் சுருண்டு விட்டது. வசூலும் இல்லை, எல்லோரும் நெகட்டிவாக விமர்சித்தார்கள். இந்த திரைப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி நடராஜ், பூமிகா, சீதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை நவம்பர் 29ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிளடி பெக்கர்: நடிகர் கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த ப்ளடி பெக்கர் திரைப்படத்தை இயக்குனர் சிவபாலன் இயக்கி இருந்தார். ஸ்டார் திரைப்படத்துக்கு பிறகு கவின் இந்த படத்தில் நடித்திருந்தார். ப்ளடி பெக்கர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இயக்குனர் நெல்சன் இப்படத்தில் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படம் நவம்பர் 29ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஷ்: ப்ரீத்தி ஆதித்யா, வாலி மோகன், தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள "ஷ்" திரைப்படத்தில் இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தியில் ஹிட்டான லாஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த "ஷ்" திரைப்படம். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி நேரடியாக ஆகா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது.
பாராசூட் : ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் சீரிஸ் தான் பாராசூட். இந்த வெப் சீரிஸில் கிஷோர், கிருஷ்ணா, காளி வெங்கட், கனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் வருகிற நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

அலெக்சாண்டரின் விதி: திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த அலெக்சாண்டரின் விதி திரைப்படத்தில் ஜிம்மி ஜெர்கின், அவினாஷ், திவாரி மற்றும் தமனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 29 அன்று நெட்பிக்ஸில் வெளியாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications