இன்டர்நேஷனல் சமையல் நிகழ்ச்சியில் ஆட்டுக்கல்லும் அருவாமனையும்.. கலக்கிய கன்டஸ்டன்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாஸ்டர் செஃப் இன்டர்நேஷனல் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலும் கிராமத்து உபகரணங்களை கொடுத்து கன்டஸ்டன்ட்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது இந்த வார டாஸ்க்.

என்ன வந்தாலும் அதிலும் அசத்திக் காட்டுவோம் என்று குழுவாக கன்டஸ்டன்ட்கள் கலக்கி விட்டார்கள்.

ஒற்றுமைக்கும், தலைமைக்கும் உள்ள தனிசிறப்புகளை இந்த வாரம் கண்டஸ்டன்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தெரிந்து கொண்டார்கள்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே இதற்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு வருவதற்கு காரணம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், என்பதும் ஒரு காரணம் தான். ஏற்கனவே வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை போல வெள்ளித்திரை கதாநாயகர்கள் பலரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் தற்போது சினிமாக்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று சொன்னதுமே இந்த நிகழ்ச்சியை பற்றி பரபரப்பாக ரசிகர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோக்களும் பிரம்மாண்ட அளவில் இருந்தது.

எல்லாமே ரிச் தானா?

எல்லாமே ரிச் தானா?

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் நடுவர்களும் பிரபலமானவர்கள் தான். ஆர்த்தி சம்பத், ஹரி ராவ் மற்றும் கௌசிக் போன்றோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருக்கின்றனர். இவர்களின் கலகலப்பும் பிரம்மாண்டமான செட்டின் தோரணையும் ரசிகர்களுக்கு மாஸாகாகவும் கன்டஸ்டன்ட் களுக்கு கொஞ்சம் மிரட்சியாகவும் இருந்துக்கொண்டிருக்கிறது. இது இன்டர்நேஷனல் சமையல் நிகழ்ச்சி என்பதால் இதில் சமையலும் ரிச் ஆக தான் இருக்கும் என்று எதிர்பார்த்து அதனை ஆர்வமுடன் கற்றுக் கொள்வதற்காகவும் சீரியல்களை விட வித்தியாசமாக இருப்பதாலும் இதனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி சன் டிவியில் சனி மற்றும் இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போன்றே இதுவும் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஏனென்றால் அதில் வேற மாதிரி இருக்கும். இது அதைவிட முற்றிலும் மாறிவிட்டது.

இன்டர்நேஷனலிலும் பழமை

இன்டர்நேஷனலிலும் பழமை

தற்போது இந்த வார எபிசோடுகள் ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்து விட்டது. இது இன்டர்நேஷனல் சமையல் நிகழ்ச்சி என்பதால் இதில் பயன்படுத்தப்படும் பொருள்களும் செய்யும் சமையலும் இண்டர்நேஷனல் லெவலில் தான் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த கன்டஸ்டன்ட்களுக்கு இந்த வாரம் பெரும் சவாலாக அமைந்து விட்டது. அவர்களுக்கு அருவாமனை, ஆட்டுக்கல், சேவரி தான் இந்த வார உபகரணங்கள் இதனை வைத்து சமைத்து அசத்த வேண்டும் என்று நடுவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதில் யாருக்கும் எந்த பொருள் என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே ஆர்த்தி, சுனிதா, மணிகண்டன், தேவகி இவர்கள் நான்கு பேருமே பால்கனிக்கு சென்று விட்டார்கள். மீதமிருக்கும் 9 கன்டஸ்டன்ட் களில் 3 குழுக்களாக பிரித்து மூன்று டீமுக்கும் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். அதற்கு சிவப்பு, மஞ்சள் ,ப்ளூ கலர் அணிகளாக பிரித்து விட்டனர்.

 கன்டஸ்டன்ட்கள் அசரலயே

கன்டஸ்டன்ட்கள் அசரலயே

இதில் மஞ்சள் டீமுக்கு வின்னியும், ப்ளூ டீமுக்கு நித்தியாவும் சிவப்பு டீமுக்கு க்ருராஜூம் தலைவர்களாக தேர்ந்தெடுக்க, அவரவர் டீம்க்கு இரண்டு பேரை செலைக்ட் செய்து ஒரு டீமுக்கு தலா மூன்று பேராக சமையல் செய்ய தொடங்கிவிட்டனர். அதில் மூன்று குரூப்புக்கு தனித்தனியாக ஒரு குரூப்புக்கு அருவா மனையும், ஒரு குரூப்புக்கு ஆட்டுகல்லும், ஒரு குரூப்புக்கு சேவரியும் கொடுத்து அதற்கு தகுந்தது போல சமையலை செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள். இதில் ஒவ்வொரு டீமும் தங்களுக்குள் பேசி தங்களுக்கு கொடுத்த பொருட்களை வைத்து எந்த மாதிரி அசத்தலாம் என்று வெகு சிறப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர். ஒருவழியாக இவர்கள் சமையலை செய்து முடிக்க அதை டேஸ்ட் செய்து ரிசல்ட்டை சொல்ல நடுவர்களும் தயாராகிவிட்டனர்.

தொடரும் த்ரில்லிங்

தொடரும் த்ரில்லிங்

பதட்டத்தோடு இருந்த கன்டஸ்டனட் களுக்கு நடுவர்களின் கமெண்ட்கள் கொஞ்சம் அதிர்ச்சியையும் ஒருசிலருக்கு சந்தோஷத்தையும் கொடுத்தது. முதலாக இவர்கள் மூன்று டீமில் மஞ்சள் டீம் பால்கனிக்கு சென்று விட்டது. மீதமிருந்த ப்ளூ டீமுக்கும், ரெட் டீமுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. இனி என்ன சொல்லப் போகிறார்களோ என்று பெரும் பரபரப்பில் இருந்த நிலையில் ப்ளூ டீம் அடுத்ததாக பால்கனிக்கு அனுப்பப்பட்டது. கடைசியாக இருந்த ரெட் டீம் கொஞ்சம் சமையலில் சொதப்பியதால் அவர்கள் மீண்டும் தனித்தனியாக பிரிந்து தங்களுடைய சமையல் திறனை செய்துகாட்ட வாய்ப்பு கொடுத்தனர். அதில் யாருடைய சமையல் சிறப்பாக இருக்கிறதோ அதில் இருவர் மட்டுமே பால்கனிக்கு செல்வர் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவார் என்று கூறியிருந்தனர். அதற்கு மூன்று பேருமே போட்டி போட்டு சமையலை செய்து கொண்டிருந்தாலும் கடைசியாக கிருத்திகா, கிராஜ் இருவரும் பால்கனிக்கு சென்று விட தாரா மட்டும் இந்த வாரம் செலக்ட் ஆகவில்லை. அதனால் அவரால் இனி இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்று கொஞ்சம் வருத்தமான செய்தியை கூறியிருந்தனர். இதைக்கேட்டு கண்டஸ்டன்கள் ஒருபுறம் வருத்தம் இருந்தாலும் நாம் செலக்ட் ஆக்கி விட்டோம் என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டனர். இந்த வாரத்தில் கன்டஸ்டன்ட் களுக்கு கலக்கலான சமையல் பொருள்களைக் கொடுத்தவர்கள் அடுத்த வாரம் என்ன மாதிரி செய்யப் போகிறார்களோ என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+