கடும் கோபத்தில் கே.எஸ் ரவிக்குமார்.. காரணம் சரத்குமார் செய்த அந்த செயல்.. இப்படியும் கூட நடக்குமா?
சென்னை: நடிகர் சரத்குமார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன கதை பலருக்கும் தெரியும்.
ஆனால் சரத்குமாருக்கும் கே.எஸ் ரவிக்குமாருக்கும் ஏற்பட்ட பயங்கரமான மோதல் பலருக்கும் தெரியாத ரகசியம்தான்.

அது குறித்து சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சரத்குமாரும் கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்து நடித்த படம் என்றால் அது "புரியாத புதிர் திரைப்படம்" தான். அந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் சரத்துகுமார் வில்லனாக கொடி கட்டி நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது கே எஸ் ரவிக்குமார் சரத்குமார் இடம் 6 நாட்கள் கால் சீட்டு கேட்டு இருந்தாராம்.
அதற்கு சரத்துக்குமாரும் ஓகே என்று சொல்லி அட்வான்ஸ் வாங்கி விட்டாராம். ஆனால் அதற்கு இடையில் சரத்குமாருக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகி படுத்த படுக்கையாக மாறிவிட்டார். அப்போது அந்த நேரத்திலும் கூட ரவிக்குமார் எனக்கு வில்லன் என்றால் அது சரத்குமார் தான் என்று கூறி, அந்த படத்திற்கு அவருடைய கேரக்டருக்கு டூப் போடாமல் படப்பிடிப்பை நடத்தி கொண்டு இருந்தாராம்.

அப்போது சரத்குமாரின் உடல்நிலை ஓரளவிற்கு சரியாகி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் கே எஸ் ரவிக்குமாரும் படத்தை கிட்டத்தட்ட முடிக்கும் தருணத்திற்கு வந்து விட்டாராம். அப்போது படப்பிடிப்புக்கு சரத்குமார் வருவதாக கூறியிருக்கிறார்.. அன்று மாலை 6 மணிக்கு சூட்டிங் வர வேண்டிய சரத்துகுமார் வேற வேலையில் பிஸியாக இருந்ததால் நள்ளிரவு ரெண்டு மணிக்கு வந்திருக்கிறார்.
இதனால் ரவிகுமாருக்கு கோபம் அதிகமாகி படபிடிப்பிலேயே சண்டை முற்றி விட்டதாம். அப்போது சரத்குமாரும் ரவிக்குமாருடன் சண்டைக்கு நிற்க ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்து அனைவரும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். அது பற்றி பேட்டி ஒன்றில் ரவிக்குமார் பேசியிருக்கிறார். ஆனால் அந்த சண்டையில் தான் இருவருக்கும் மேலும் நட்பு வலுப்பெற்றது என்றும் கே.எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications