Thug life 1st day collection: தக் லைஃப் முதல் நாள் கலெக்சன் இப்படி ஆயிடுச்சே! நடந்தது வேறு விதமாக இருக்கு
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சிலம்பரசன் உட்பட பலர் நடிப்பில் நேற்று ஜூன் 5-ம் தேதி வெளியான தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் பெற்றது என்ற பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் 38 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் செய்திருக்கிறது.
தக் லைஃப் திரைப்படம் நேற்று உலகம் எங்கும் ரிலீஸானது. இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் இந்த திரைப்படத்தில் கமல், சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதுபோல மணிரத்தினம் பல வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றனர்.

தக் லைஃப் திரைப்பட சிறப்பு
இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பாக ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுபோல படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீதர் பிரசாத் செய்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த திரைப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் காத்திருந்தனர்.
தக் லைஃப் தயாரிப்பு நிறுவனம்
தக் லைஃப் திரைப்படத்தை கமல்ஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம், மணிரத்தினத்தின் மெட்ராஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நேற்று ரிலீஸ் ஆனது. உலகம் எங்கும் 2200 திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளே படுமோசமான விமர்சனங்கள் குவிந்தது.

தக் லைஃப் திரைப்பட ரிவ்யூ
தமிழ் ரசிகர்களே இந்த படத்தை விமர்சித்து வருகிறார்கள். சிலர் இதை பாராட்டி இருந்தாலும் அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியன் 2 படத்தை விட மோசமாக இருப்பதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். முதல் நாளில் இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேலே வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான ரிவ்யூ காரணமாக பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவு சந்தித்ததாக கூறப்படுகிறது.
தக் லைஃப் முதல் நாள் வசூல்
அதன்படி தக் லைஃப் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 25 கோடி முதல் 30 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த படம் வெறும் 17 கோடி தான் வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டின் மட்டும் 15.5 கோடி வசூலித்த இந்த திரைப்படம் தெலுங்கில் 1.5 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுபோல இந்தியில் பல ப்ரொமோஷன்கள் செய்தும் அங்குதான் படுமோசமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. அதாவது வெறும் 10 லட்சம் தான் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications