Thug life 3rd day box office: விடுமுறை நாளில் தக் லைஃப் எதிர்பாராத வசூல்.. மொத்தம் இத்தனை கோடி!
சென்னை: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் மூன்றாவது நாளில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த திரைப்படம் அதிக வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் குறைவாகத்தான் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்களுக்கு பிறகு உருவான தக் லைஃப் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் கமிட்டான பல நடிகர்கள் திடீரென்று இதிலிருந்து விலகி விட்டனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும் கடைசியாக நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன் இணைந்து நடித்திருந்தார்.

பிரமோஷன்
தக் லைஃப் திரைப்படத்திற்காக பிரமோஷன் பணிகள் பிரமாண்டமாக நடைபெற்று வந்தது. அதேபோல இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய வார்த்தைகளும் சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது என்று கூறி வருகிறார்கள்.
தக் லைஃப் வெளியீடு
தக் லைஃப் திரைப்படம் கடந்த மே ஐந்தாம் தேதி அன்று திரையரங்கில் வெளியானது. உலகெங்கும் ஒரே நாளில் இந்த திரைப்படம் வெளியானாலும் இந்த திரைப்படம் முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற தொடங்கிவிட்டது. அதிலும் நெகட்டிவ் கமாண்டுகளும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல இந்த படத்தை பற்றிய மீம்ஸ்களும் சோசியல் மீடியா பக்கம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தக் லைஃப் பாக்ஸ் ஆபீஸ்
இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளில் 15. 5 கோடி வசூலித்தது என்று கூறப்பட்டது. அதேபோல இரண்டாவது நாளில் முதல் நாளை விட பாதியாக குறைந்துவிட்டது. 7.15 கோடி தான் வசூல் செய்தது. மூன்றாம் நாளான நேற்று பக்ரீத் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் படத்தில் வசூலில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தான் இருக்கிறது.
தக் லைஃப் மூன்றாவது நாள் வசூல்
நேற்று தக் லைஃப் திரைப்படம் 7.50 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் தக் லைஃப் திரைப்பட பாக்ஸ் ஆபீஸில் மூன்று நாட்களில் 30.15 கோடி வசூலித்து இருக்கிறது. நேற்று தமிழ்நாட்டில் மட்டும் 6.2 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு 250 முதல் 300 கோடி செலவில் மணிரத்தினம் உருவாக்கி இருக்கிறார். இதனால் தக் லைஃப் திரைப்படத்தின் பட்ஜெட் பணம் கூட வசூலிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. படத்தில் சிம்பு மற்றும் கமல்ஹாசனின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் கதை சுவாரசியமாக இல்லை, கேங்ஸ்டர் படம் என்று கூறப்பட்ட போதிலும் அங்கு கதையில் அழுத்தம் இல்லாமல் இருப்பது கதையின் மைனசாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications