Thug Life box office: தக் லைஃப் முதல் நாளில் இத்தனை கோடி வசூலிக்குமா? லீக்கான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் உட்பட பலர் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மணிரத்தினமும் கமல்ஹாசனும் 38 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் முதல் நாள் முன்பதிவு அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்ச்சைக்கு பெயர் வாங்கிய கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கடும் சர்ச்சைக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி பற்றி கமல்ஹாசன் பேசியது காரணமாக சர்ச்சை உருவானதால் கர்நாடகாவில் மட்டும் இந்த திரைப்படம் வெளியாகவில்லை.

தக் லைஃப் பட பட்ஜெட்
இப்படத்திற்கு முன்பதிவு அதிகமாக இருந்ததால் முதல் நாள் இந்த படம் பெரிய அளவில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு பட்டியல் வெளியேற்றி இருக்கிறது. தக் லைஃப் திரைப்படம் சுமார் 11 கோடி வரை முன்பதிவில் வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல 300 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
தக் லைஃப் நடிகர்கள்
அது போல தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 2200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் கதையில் கேங்ஸ்டர்ஸ் ட்ராமா அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் உடன் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
தக் லைஃப் முதல் நாள் முன்பதிவு நிலவரம்
இந்த படம் இந்தியாவில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அமெரிக்கா மற்றும் துபாயில் வெளியிடப்பட்டன. அங்கு இந்த படத்தை பார்த்துவிட்டு பலர் படத்தின் விமர்சனங்களை twitter பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் இந்த படம் வெளியிடாததால் பட குழுவிற்கு 10 முதல் 15 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அது போல பெரிய எதிர்பார்ப்போடு இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் அமெரிக்காவில் ஆயிரம் திரையரங்கங்களில் படம் வெளியாகி உள்ளது.

தக் லைஃப் முதல் நாள் வசூல் நிலவரம்
முதல் நாளில் ஒரு மில்லியன் டாலர் வசூலிக்கும் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதுபோல இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் 45 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தமாக தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் 50 கோடி முதல் 60 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் அதிகபட்சமாக ரூபாய் 5.3 கோடி டிக்கெட் விற்று உள்ளன. அதுபோல இந்தி பதிப்பில் ரூ 26 லட்சத்திற்கு டிக்கெட்டுகள் விற்றுள்ளது. தெலுங்கு பதிப்பகத்தில் ரூபாய் 54 லட்சத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications