Thug Life trailer: அன்று வேலு நாயக்கர்! இன்று ரங்கராய சக்திவேல் நாயக்கர்! தக் லைஃப் டிரெய்லர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் தக் லைப் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது. இந்த திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.

கமல், சிம்பு, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தக் லைஃப். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

thug life

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் கமல்ஹாசனின் மகன் சிம்பு என தெரிகிறது. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தீரா பகை இருந்து வருவதும் தெரிகிறது.

சுமார் 2 நிமிடங்கள் வெளியான டிரெய்லரில் கமல் , நீ என் உயிரை காப்பாற்றியவன், எமனிடம் இருந்து என்னை மீட்டெடுத்தவன். உன் தலையெழுத்தையும் என் தலையெழுத்தையும் ஒன்னா எழுதி வச்சிட்டான். இனி நீயும் நானும் ஒன்னு! கடைசி வரைக்கும்!

மகன் சிம்புவிடம் நான் 8 அடி பாய்ந்தால், நீ 18 டா என்கிறார். அதற்கு சிம்பு 16 என்கிறார். சரி கணக்குபுள்ளே என கமல் கிண்டல் செய்கிறார். உள்ளே இருந்து நான் பார்த்துகிட்டு இருப்பேன். வெளியே அமர் பார்த்துக்குவான் என்கிறார்.

நீங்கள் போவது எனக்கு சரியாக படலை என அபிராமி சொல்லும் போது கமல் படாக்கென லிப் லாக் செய்கிறார். பின்னர் மறுபக்கம் த்ரிஷாவுடனும் ரொமான்ஸ் செய்கிறார். அது என்ன கதை என தெரியவில்லை. இனிமேல் இங்கு நான்தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு ஆக்ரோஷமாக கூறுகிறார். இது எனக்கும் அவனுக்கும் நடக்கிற கதை, நீயா நானான்னு பார்த்துடுவோம் என கமல் சொல்கிறார்.

டிரெய்லர் மிரட்டும் வகையில் உள்ளது. இந்த படம் சிம்புவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கதை களம் என்னவெனில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் ஒரு பிரபலமான செல்வாக்கு மிக்க காட்ஃபாதர். வன்முறையும் சிண்டிகேட் கும்பலுடனாந தொடர்புதான் இவருடைய உலகம்.

ரங்கராய சக்திவேல் நாயக்கருக்கு அவருடைய மகன் மிகவும் நெருக்கமானவர். கதையின் ஒரு கட்டத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இறுதியில் அவர் திரும்பி வருகிறார். விதியால் பிரிந்த அவரும் மகனும் எதிர்களாகி விடுவார்கள். பின்னர் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இதில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதும் என்ன கதை , எதற்காக அப்பா - மகன் இடையே சண்டை என்பதெல்லாம் தெரிய வேண்டும் என்றால் ஜூன் 5ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

நீங்கள் டிரெய்லரை பார்த்துவிட்டீர்கள். இந்த கதை குறித்து உங்கள் பார்வை என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+