சீக்கிரமா போயிருவேன்.. வீங்கிய வயிற்றுடன் தவிக்கும் நடிகர் அபிநய்! இதோ நண்பனுக்காக தனுஷ் செய்த சபாஷ்
சென்னை: வயிறு வீங்கிப்போய் எலும்பும், தோலுமாய் இருக்கும் நடிக்கும் அபிநய்க்கு சினிமாவை சேர்ந்த பலரும் உதவ முன்வர வேண்டும் என்று ஏராளமானோர் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.. அத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் அபிநய்க்கு பலரும் ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தபடியே உள்ளனர்.. இந்நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்க்கு மருத்துவ செலவுக்கு பண உதவி செய்திருக்கிறார்.. இது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடன் அதே படத்தில் அறிமுகமானவர்தான் அபிநய்..

டப்பிங் சான்ஸ்
முதல்படத்திலேயே பலரது பாராட்டையும் பெற்ற அபிநய், தமிழில் தொடர்ந்து நடித்தார்.. ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை படங்களில் ஹீரோவாகவே நடித்தார்.. பிறகு மலையாளம் படங்களிலும் நடித்தார்.. ஆனால், பெயரை சொல்லும் அளவுக்கு எந்த படமும் பேசப்படவில்லை.. அவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின..
டப்பிங் உள்ளிட்ட எத்தனையோ பணிகளை செய்தும், அபிநய்க்கு போதிய வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை.. கையில் பணமின்றி, அம்மா உணவகத்தில் சாப்பிட்டதாகவும் தன்னுடைய பேட்டிகளில் அபிநய் கூறியிருந்தார்.. ஆனால், சமீப நாட்களாகவே உடல்நலக்குறைவால் அபிநய் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், Cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு நடிகர் அபிநய் குறித்து பேசியிருந்தார்..
அதில், "எப்போதுமே ஒரு மனிதன் நன்றாக இருந்தால்தான், 10 பேர் மதிப்பார்கள்.. சீட்டுக்கட்டு மாதிரி சரிந்துவிட்டால், ஒருத்தரும் திரும்பி பார்க்க மாட்டார்கள்..
துள்ளுவதோ இளமை படம் வரும்போது, அபிநய்யை பார்த்துவிட்டு, இந்த தம்பிதானே ஹீரோவாக நடிக்க வேண்டியவர்? தனுஷை எதுக்கு ஹீரோவாக்கினார்கள்? என்று அன்றைய காலங்களில் விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.. இந்த விமர்சனங்களை படித்துவிட்டு, நடிகர் தனுஷ், தனியாக சென்று அழுததாகவும் செய்திகள் உண்டு..
அபிநய் அம்மா
கதைகளை சரியாக தேர்வு செய்யாதது, படங்களின் தொடர் தோல்விகள், சரியாக வாய்ப்பு கிடைக்காதது, தாயின் மரணம் என அடுத்தடுத்த சரிவுகளில் சென்றுவிட்டார் அபிநய்.. இப்போது அபிநய் உயிருக்கு போராடுகிறார்.. ஆனால் அவருக்கு யாரும் உதவவில்லை..
தனுஷ் 120 கோடி சம்பளம் வாங்கினாலும், அவர் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லைதான்.. ஆனால், முதல் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் என்றாவது நினைக்கலாமே? என்று பலரும் சோஷியல் மீடியாவில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்..
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
அபிநய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 28 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கிறது.. நண்பர்களின் மூலம் சில லட்சங்கள் கிடைத்தது.. கேபிஒய் பாலாவும், தன்னுடைய சார்பாக 1 லட்சம் ரூபாய் தந்துள்ளார்.
எனினும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இதுவரை அபிநய்க்கு உதவவில்லை.. "யாருகிட்டயும் நான் பிச்சை எடுக்க விரும்பல.. உயிர் போனால் போகட்டும்" என்ற விரக்தி மனநிலைமைக்கும் அபிநய் வந்துவிட்டார்.
திரைப்பட துறையை பொறுத்தவரை, எப்போதுமே பொண்ணு, தண்ணி, சூது போன்றவை எளிதாக கிடைத்துவிடும். ஆனால், சினிமாவுக்கு வரும் இளைஞர்கள்தான், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.. இதுதான் அபிநய் மூலம் கிடைத்துள்ள பாடமாகும்" என்று கூறியிருந்தார் செய்யாறு பாலு.
தனுஷ் செய்த உதவி
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் தனுஷ், அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.. அபிநய்யின் மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து நடிகர் தனுஷ் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.. தனுஷின் இந்த உதவியானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. அபிநய் விரைந்து குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருவதுடன், தனுஷூக்கும் நன்றி சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications