அந்த நடிகர் அப்படியா? நம்ப முடியல.. டிக் டாக் இலக்கியா விட்டில் பூச்சி.. நடிகை அனுராதா தில்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக் பிரபலம் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதற்கு காரணம், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் என்றும் நேற்றைய தினம் திடீர் பரபரப்பும், சலசலப்பும் கிளம்பியது.. ஆனால், இலக்கியாவின் பதிவிட்டதாக கூறப்பட்ட அந்த இன்ஸ்டா பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவு போலியானது என்றும் சொல்லப்பட்டுள்ளது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, இலக்கியா தற்கொலை முயற்சி செய்தார் என்று யார் சொன்னது? உறுதி செய்யப்பட்ட மருத்துவ ரிப்போர்ட் இருக்கா? ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்டதாக டாக்டர்கள் சொன்னார்களா? இலக்கியா சொன்னாரா? பிறகு எப்படி தகவல்களை சொல்ல முடியும்?

Television tik tok elakkiya actress anuradha

எல்லாமே வதந்தி

போட்டோவில் பார்த்தால் மயக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.. போதையில் இருந்தால் எப்படி இருப்பார்களோ, அதுபோலவும் தெரிகிறது.. மற்றபடி அவர் என்ன சாப்பிட்டார்? என்று உறுதியாக யாருக்குமே தெரியாது. ஒருவேளை ஊட்டச்சத்து மாத்திரையை இலக்கியா சாப்பிட்டதாகவே இருந்தாலும் அதை மருத்துவ அறிக்கைதான் சொல்ல வேண்டும்.

திலீப் சுப்பராயன் பெயர் அடிபட்டுள்ளது.. தற்கொலை முயற்சிக்கு காரணமே அவர்தான் என்று இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு, அதுவும் டெலிட் செய்யப்பட்டுள்ளது.. பிறகு எப்படி உறுதியான முடிவுக்கு வரமுடியும்? திலீப் சுப்பராயனுடன்தான் இலக்கியாவுக்கு தொடர்பு இருந்ததா? என்பது உறுதியாக தெரியாது. ஏனென்றால் இலக்கியா போன்றோர், ஒழுக்கம் கெட்டவர்கள்..

இவரா இப்படி? அவரா அப்படி?

பெரிய இமேஜ் உள்ள நடிகர்களே பல இடங்களில் விழுந்துள்ளனர்.. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் சினிமாவில் நடக்கிறது.. அவரா இப்படி? இவரா அப்படி? என்றெல்லாம் நினைக்கத்தோன்றும். அப்படியான விஷயங்களும் சினிமாவில் நடக்கிறது.. ஆனால், திலீப் சுப்பராயன் பெயர் அடிபடுவதாலேயே அவர் மீது சந்தேகிக்க முடியாது.. இலக்கியா சொல்வது உண்மையா என்றும் தெரியாது. அதற்கேற்ற மாதிரி, அது ஃபேக் நியூஸ் என்றும் தற்போது அறிவித்துவிட்டார்கள்..

கவர்ச்சி நடிகைகைளிலேயே மிகவும் துணிச்சலாக பேசுபவர்களாக அனுராதா, ஷகீலா உள்ளனர்.. சில்க் ஸ்மிதாவை போலவே வெளிப்படைத்தன்மை பேச்சு நிறைந்தவர் ஷகீலா.. இவர்கள் எல்லாம் சினிமாவில் ஒரு எல்லையை எட்டியவர்கள்.. அந்தவகையில், ஏதோ ஒன்றை சினிமாவில் சாதித்தும் உள்ளனர்..

உடம்பை காட்டி காசாக்குகிறார்கள்

ஆனால், டிக்டாக்கில், இன்ஸ்டாவில் பலரும் உடம்பை காட்டி, காசாக்குகிறார்கள்.. இது சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும்.. இந்த வீடியோக்களை பார்த்து திருமணம் செய்து கொள்ள, இளைஞர்களுக்கு ஆசை வந்தால் பரவாயில்லை, ஆனால் விபரீதமான தவறான ஆசைகளில் சிக்கிவிட்டால்? காம ஆசையால் பல இளைஞர்கள் திசைமாறி போகிறார்கள்.

இலக்கியா என்பவர் ஏழை குடும்பத்து பெண்.. 8 வயதில் தாயை இழந்துவிட்டார். அப்பா 2வது திருமணம் கொண்டார்.. இலக்கியாவின் 2 அக்காக்களுக்கு திருமணமாகிவிட்டது.. வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு பஞ்சு மில்லில் இலக்கியா வேலை பார்த்துள்ளார்..

விட்டில்பூச்சி வாழ்க்கை

ஆனால், பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் சோஷியல் மீடியாவுக்கு வந்தவர்.. எங்க அம்மா இருந்திருந்தால், இப்படி என் வாழ்க்கையே திசை மாறியிருக்காது என்று இலக்கியாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்..

சினிமாவில் பிரபலமாக வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, இலக்கியா போல எத்தனையோ பேர், தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர். சினிமாவை நம்பி ஏமாந்த பல பெண்களில் இலக்கியாவும் ஒருவர்... இது விட்டில் பூச்சி வாழ்க்கை" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+