ஜனநாயகன் படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க, நான் தான் போகல! காரணம் இதுதான்! யூடியூபர் கனி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமடைந்த கனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது தனக்கு நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறி இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களுக்கு தான் இப்போது சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதாக பிரபல நடிகர், நடிகைகள் வருத்தங்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் வீடியோக்கள் போடுபவர்களுக்கு சரியாக நடிக்க கூட தெரியவில்லை ஆனால் அவர்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை கூட அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை. பெரிய நடிகர்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், என்றெல்லாம் சமீபத்தில் நடிகை வடிவக்கரசி உட்பட சிலர் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

Vijay Jananayagam movie

வடிவுக்கரசியின் வருத்தம்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுபவர்களுக்கு நடிப்பு பெரிதாக தெரியாது. அடுத்தவர்களின் டயலாக்குக்கு தான் இவர்களால் எக்ஸ்பிரஷன் காட்ட முடியும். இவர்களால் சொந்தமாக நடிக்க முடியாது என்று பேசி இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதே நேரத்தில் இதை சிலர் சரி என்று கூறி வந்தனர். ஆனால் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் அது தவறு எங்களுக்கும் நடிக்க தெரியும் என்று வாதிட்டு வருகிறார்கள்.

யூடியூபர் கனி

இந்த பஞ்சாயத்திற்கு மத்தியில் இப்போது யூடியூபர் கனி தனக்கு வந்த வாய்ப்பு குறித்து பேசி இருக்கிறார். டிக் டாக்கில் ஆக்டிவாக இருந்த கால கட்டத்தில் கனிமணி என்ற டிக் டாக் ஐடியில் கனியும் அவருடைய கணவர் மணியும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இப்போது மணி தனியாக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கனி சமீபத்தில் இன்னொரு நபருடன் சேர்ந்து வீடியோக்கள் போட தொடங்கி இருக்கிறார்.

ஜனநாயகன் பட வாய்ப்பு

அதே நேரத்தில் கனி சில பேட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும்போது தனக்கு ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் என்னுடைய அப்பா இருந்த வரைக்கும் youtube இல் வீடியோ போடுவதற்கே முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் கெஞ்சி கூத்தாடி தான் தாங்கள் வீடியோ போட தொடங்கினோம்.

சினிமாவுக்கு மறுப்பு

எங்களுக்கு இதில் வரும் வருமானமே போதும் அதனால் எங்களுக்கு சினிமா வாய்ப்பு வேண்டாம் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். ஜனநாயகம் படத்தில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் நடிக்கிறீர்களா என்று கேட்டு வராங்க. ஆனால் நாங்க தான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதை வெளியே சொன்னால் ஆமா இவ பெரிய இவ, விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம் இதை நம்பனுமானு சொல்லுவாங்க. ஆனா உண்மை இதுதான்.

உங்க கருத்து

நாங்க எங்க அப்பாவுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்து இருக்கிறோம். அதனால் சினிமாவில் நடிக்க போறது கிடையாது. எங்களுக்கு youtube இல் வரும் வருமானத்தால் தான் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவே போதும் என்று கனி கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை சனம் ஷெட்டி தனக்கு ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் கனி தனக்கு வந்த வாய்ப்பு நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறி இருக்கிறார். யூடியூபர் கனியின் இந்த விளக்கத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+